ஐபிஎல் விரிவாக்கத்தால் உலகிற்கு ஆபத்து – இந்தியாவுக்கு எதிராக உலகநாடுகளை சேர்த்து ஐசிசியிடம் போராட தயாராகும் பாகிஸ்தான்

Ramiz Raja Sourav Ganguly
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு தொடராக உருவெடுத்துள்ள ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26 முதல் 29 வரை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்த வருடம் 10 அணிகள் விளையாடியதால் வழக்கமாக நடைபெறும் 60 போட்டிகளுக்கு பதில் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்வித்தது. இம்முறை பல விறுவிறுப்பான த்ரில்லர் போட்டிகளுடன் வரலாற்றில் முதல் முறையாக 1000க்கும் மேற்பட்ட சிக்ஸர்கள் விளாசப்பட்டன.

அப்படி பரபரப்பாக நடைபெற்றதால் அடுத்த ஐபிஎல் எப்போது வரும் என்று இப்போதே பல ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கிடக்கிறார்கள். ஏனெனில் நிமிடத்திற்கு நிமிடம் அனல் பறக்கும் ஐபிஎல் தொடரை பார்த்துவிட்டு சர்வதேச அளவில் பெரும்பாலான சமயங்களில் ஒரு தலைப்பட்சமாக தரமில்லாமல் நடைபெறும் டி20 தொடர்களை பார்க்கும்போது ரசிகர்களுக்கு அலுப்பு தட்டும் வகையில் அமைகிறது. எடுத்துக்காட்டாக இந்தியா – இலங்கை போன்ற அணிகள் மோதும் போது இலங்கை பலவீனமாக இருப்பதால் அந்த போட்டியில் தரம் இருப்பதில்லை.

- Advertisement -

விரிவடையும் ஐபிஎல்:
அதனால் சர்வதேச அளவிலான டி20 போட்டிகளை கால்பந்தை போல வெறும் டி20 உலக கோப்பையாக 2 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் நடத்திவிட்டு எஞ்சிய தருணங்களில் பெரிய ஐபிஎல் அல்லது 2 ஐபிஎல் தொடர்களை நடத்தலாம் என்று முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரி போன்றவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதனால் ரசிகர்களுக்கு தரமான கிரிக்கெட் போட்டிகளும் வாரியத்திற்கு பணமும் இரு மடங்கு கிடைக்கும் என்று அவர்கள் கூறியிருந்தனர். தற்போது அது உண்மையாகவே நடைபெறப் போவது அதிகாரபூர்வமாகியுள்ளது.

IPL vs EPL

ஆம் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2023 – 2027 கால கட்டத்திற்கான ஒளிபரப்பு ஒப்பந்த ஏலத்தில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைகளை 48,360 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு டிஸ்னி ஸ்டார், வியாகாம்18, டைம்ஸ் இன்டர்நெட் ஆகிய 3 நிறுவனங்கள் வாங்கியுள்ளன. அந்த நிறுவனங்களிடம் வரும் 2023 – 2027 காலகட்டத்தில் 410 ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ உறுதியளித்துள்ளது. அதாவது வரும் 2025க்கு பின் 84, 94 போட்டிகள் கொண்ட தொடராக ஐபிஎல் விரிவடைய உள்ளது.

- Advertisement -

ஐசிசி சம்மதம்:
அது வெற்றி அடையும் பட்சத்தில் வரும் காலங்களில் 2 ஐபிஎல் தொடரும் நடைபெறுவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. அதற்கேற்றார்போல் ஐசிசியின் அடுத்த வருங்கால அட்டவணையில் (எஃப்டிபி) இரண்டரை மாதங்கள் ஐபிஎல் தொடர் விரிவுபடுத்தப்படும் வகையில் மாற்றங்கள் செய்யப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சமீபத்தில் அறிவித்துள்ளார். ஏனெனில் அப்போதுதான் அனைத்து வெளிநாட்டு வீரர்களும் தடையின்றி விளையாட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

INDvsPAK

சர்வதேச போட்டிகளை நடத்துவதால் கிடைக்கும் வருமானத்தை விட ஐபிஎல் தொடரில் இரு மடங்கு வருமானம் கிடைப்பதால் ஐசிசியும் அதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. மேலும் நடைபெற்று முடிந்த ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை ஏலத்தால் கிடைத்த வருமானத்தின் அடிப்படையில் ஈபிஎல், என்பிஏ, எம்பிஎல் போன்ற இங்கிலாந்து, அமெரிக்க நாடுகள் நடத்தும் கால்பந்து, கூடைப்பந்து தொடர்களையும் முந்தியுள்ள ஐபிஎல் உலகின் நம்பர் 2 விளையாட்டு தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

- Advertisement -

குமுறும் பாகிஸ்தான்:
அதிலும் இந்தியாவை விட நாங்கள் பெரியவர்கள் என்று மார்தட்டும் பாகிஸ்தான் நடத்தும் பிஎஸ்எல் தொடரின் ஒரு போட்டி மதிப்பு வெறும் 2.76 கோடி என்ற நிலையில் ஐபிஎல் தொடரின் ஒரு போட்டி மதிப்பு 115.4 கோடி என்ற எட்ட முடியாத உயரத்தை தொட்டுள்ளது. இதனால் குமுறும் பாகிஸ்தான் ஐபிஎல் விரிவாக்கத்தால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் பாதிப்படையும் என்ற ஆயுதத்தை கையிலெடுத்து இதர நாடுகளை சேர்த்துக்கொண்டு ஐசிசியிடம் முறையிட்டு போராட தயாராகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

psl 1

மேலும் பாகிஸ்தானை தவிர உலகின் எஞ்சிய அனைத்து வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாடாததால் அந்த நாட்களில் அவரது நாட்டு வீரர்கள் எந்த முக்கிய தொடரிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதே அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் இந்த கோபத்திற்கு காரணமாகும். இது பற்றி பிரபல கிரிக்கெட் பாகிஸ்தான் எனும் இணையத்தில் வெளியாகியுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது பின்வருமாறு.

“ஐபிஎல் தொடருக்காக ஸ்பெஷலான மாற்றத்தை அடுத்த ஐசிசி 2024 – 2031 கால அட்டவணையில் செய்வதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அத்துடன் பாகிஸ்தான் வீரர்களை தவிர உலகின் எஞ்சிய வீரர்கள் அதில் பங்கேற்பதை நிரந்தரமாக்கவும் முடிவெடுத்துள்ளது. இருப்பினும் சர்வதேச இரு தரப்பு தொடர்கள் தொடர்ச்சியாக நடைபெறும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதியளித்துள்ளார். ஆனாலும் ஐபிஎல் விரிவாக்கம் உலக அளவில் பிரச்சினையை ஏற்படுத்த வல்லது என்பதால் இது பற்றி மற்ற கிரிக்கெட் வாரியங்களுடன் விவாதித்து முடிவெடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement