முஹமது ஹபீஸ் மீது ஒழுங்கு மீறல் நடவடிக்கை எடுக்க இருக்கும் பாக் கிரிக்கெட் வாரியம் – விவரம் இதோ

Hafeez

கொரனோ அச்சுறுத்தலுக்கு இடையே மூன்று மாதங்களுக்குப் பிறகு தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் துவங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கனவே மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்று உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ஜூலை 8 ஆம் தேதி துவங்குகிறது.

Pak-1

அந்த தொடர் முடிந்த பிறகு இங்கிலாந்து அணியுடன் பாகிஸ்தான் விளையாடுகிறது. பாகிஸ்தான் 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்து செல்கிறது. இந்நிலையில் இங்கிலாந்து செல்வதற்கு முன்னதாக நடத்தப்பட்ட பரிசோதனையில் 29 பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் 12 பயிற்சியாளர் குழுவினர் கலந்து கொண்டனர்.

மேலும் அவரவர் வீடுகளுக்கு சென்று இந்த கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ், வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ், முன்னணி பேட்ஸ்மேன் பகார் ஜமான் ஆகியோருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 வீரர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

Hafeez 1

ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பை மீறி தனியார் மருத்துவமனையில் முஹமது ஹபீஸ் தனது குடும்பத்துடன் கொரோனா பரிசோதனை மீண்டும் செய்து கொரோனா தொற்று இல்லை என்பதை கூறினார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு தொற்று இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Hafeez

இதைத்தொடர்ந்து தனிமையில் இருக்காமல் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தின் விதிமுறையை மீறியதாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நோய் தொற்று உள்ளவர்கள் இந்த சுற்றுப்பயணத்தில் இடம்பெற மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.