பிசிசிஐ மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழக்கு பதிவு..! பாகிஸ்தானுக்கு இத்தனை கோடி நஷ்ட ஈடா..! ஏன் தெரியுமா..! காரணம் இதுதான்..?

pakisthan

இந்திய மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் கடிந்த 2014 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. அதில், பாகிஸ்தானுடன் இந்தியா மொத்தம் 6 கிரிக்கெட் தொடர்களை விளையாட வேண்டும். இதில் 4 தொடர்கள் பாகிஸ்தானில் நடைபெறவிருந்தன. ஆனால் 2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதலுக்குப் பிறகு, பிசிசிஐ, பாகிஸ்தானுக்குச் சென்று கிரிக்கெட் தொடர் விளையாட மறுத்து வந்தது.
shoaib
ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தாகி திட்டமிட்டபடி தொடர்கள் நடத்தப்பெறாததால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தது. அதே போல 2015 – 2023 ஆம் ஆண்டு வரை இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த இரு அணிகளும் 6 தொடர்களில் விளையாட இருந்த நிலையில் இந்திய அணி பாகிஸ்தான் மண்ணில் வந்து ஆட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது.

இந்த 6 தொடர்களில் 4 தொடர்கள் பாகிஸ்தான் மண்ணில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், ஒப்பந்தம் போட்டபடி இந்திய அணி தொடரில் பங்கு பெறாததால் கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ,இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வக்கீல் நோட்டீஸை அனுப்பியிருந்தது. ஆனால் அதை பிசிசிஐ, அது இரு அணிகளுக்கும் இடையேயான ஒப்பந்தம் மட்டுமே என நிராகரித்தது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 69.4 மில்லியன் டாலர்கள் (கிட்டத்தட்ட 449 கோடி ரூபாய்) நஷ்ட ஈடு கேட்டு பாகிஸ்தான் அணி வழக்கு பதிவு செய்வதற்காக அடுத்த வாரம் இங்கிலாந்தில் உள்ள வழக்கறிஞ்சர்களை சந்திக்க உள்ளது. அதே சமயம் இந்த பிரச்சனை தொடர்பாக ஐசிசி தலைமையில் இருந்து 3 பேர் கொண்ட குழு அமைப்பட்டு இந்த பிரச்சனையின் விசாரணையை வரும் அக்டோபர் 3 ஆம் தேதி துபாயில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.