நீங்க வந்தா நல்லாயிருக்கும். உங்க முடிவு என்ன ? இந்தியாவின் பதிலுக்கு காத்திருக்கும் பாகிஸ்தான்

Pakistan
- Advertisement -

அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான அட்டவணை அடுத்த வருடம் வரையறுக்கப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

pakisthan

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பையில் இந்திய அணி கலந்து கொள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய அணியின் முடிவை தற்போது நாடியுள்ளது. அதன்படி செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள இந்த போட்டிக்கு ஜூன் மாதம் வரை இந்திய அணியின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்றும் அதற்குள் இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்து அறிவிக்கலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சிஇஓ வாசிம்கான் கூறியுள்ளார்.

அதன்படி பாகிஸ்தான் நிர்வாகம் தரப்பில் வெளியாகிய செய்தியில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த வருடம் நிச்சயம் பாகிஸ்தானில் நடைபெறும். இந்த போட்டி தொடரில் இந்திய அணி கலந்து கொள்ளவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அவர்களின் முடிவு இன்று வரை உறுதி செய்யப்படவில்லை.

pakisthan

அடுத்த வருடம் ஜூன் மாதம் வரை நாங்கள் இந்திய அணியின் முடிவுக்காக காத்திருக்கிறோம் அவர்கள் முடிவை உறுதி செய்தால் அதற்கு ஏற்றார்போல் அட்டவணை தொகுக்கப்படும் .இந்திய அணி கலந்து கொண்டாலும் இல்லை என்றாலும் திட்டமிட்டபடி செப்டம்பர் மாதத்தில் ஆசிய கோப்பை நடைபெறும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement