பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் ஜாம்பவான் நியமனம் – விவரம் இதோ

Pak
- Advertisement -

1990 காலகட்டங்களிலும் 2000மாவது வருடத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இந்திய அணிக்கு சற்றும் குறைவில்லாத ஒரு அணியாக பாகிஸ்தான் அணி திகழ்ந்தது. அப்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி என்றால் ரசிகர்களுக்கு அவ்வளவு கொண்டாட்டமாக அமையும். ஏனெனில் சமபலம் வாய்ந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் பொழுது பரபரப்பாக போட்டி நடைபெறும்.

Pakistan

- Advertisement -

அது மட்டுமின்றி இந்தியாவின் பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தினால் அதனை உலகக் கோப்பை போல இந்திய ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அந்த அளவிற்கு பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தினை இந்திய ரசிகர்கள் விரும்பி பார்த்து வந்தனர். அதேபோன்று தான் பாகிஸ்தான் ரசிகர்கள் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டியை ரசித்து வந்தனர்.

ஆனால் பாகிஸ்தான் அணியில் இருந்த பல ஜாம்பவான் வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு தற்போது அந்த அணி வலுவிழந்து காணப்படுகிறது. மேலும் முந்தைய காலகட்டத்தில் பல்வேறு பேட்ஸ்மேன்களை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இப்போது உள்ள பாகிஸ்தான் அணியில் விரல் விட்டு என்ன கூடிய அளவிலேயே சிறந்த பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். அதனால் பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் வலுப்படுத்தும் விதமாக தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதே நாட்டை சேர்ந்த முன்னாள் ஜாம்பவானான யூனிஸ் கானை பேட்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளது.

Younis

மேலும் யூனிஸ்கான் சர்வதேச போட்டிகளில் அதிக அளவு விளையாடி உள்ளதால் தனது திறமையை பயன்படுத்தி பல உள்ளூர் ஆட்டக்காரர்களை வளர்த்துள்ளார். அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் சர்வதேச அணிக்காக அவரது சேவை செய்யுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்பி அவரை நியமித்துள்ளது. இவரின் மூலம் பாகிஸ்தானில் திறமை வாய்ந்த பல பேட்ஸ்மேன்களை உருவாக்கவும் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. வரும் 2022ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வரை யூனிஸ்கான் பேட்டிங் பயிற்சியாளராக இருப்பார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Younis 1

யூனிஸ் கான் பாகிஸ்தான் அணிக்காக 118 டெஸ்ட் போட்டிகள், 265 ஒருநாள் போட்டிகள் அதுமட்டுமின்றி 25 டி20 போட்டியிலும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி சார்பாக அதிக ரன்களை குவித்த வீரர் என்பதால் நிச்சயம் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் இவரால் முன்னேற்றம் அடையும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Advertisement