இந்திய வீரர்களை மதிக்காத பாண்டிங்கால்.. பஞ்சாப் கோப்பை வெல்லாது.. மனோஜ் திவாரி விளாசல்

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 26ஆம் தேதி கொல்கத்தாவில் 44வது போட்டி நடைபெற்றது. பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய அந்தப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து கொடுக்கப்பட்டது. முன்னதாக அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் 20 ஓவரில் 201/4 ரன்களை அடித்தது.

அந்த அணிக்கு இளம் இந்திய துவக்க வீரர்கள் பிரியான்ஸ் ஆர்யா அதிரடியாக 69 (35), பிரப்சிம்ரன் சிங் 83 (49) ரன்கள் அடித்து அபார துவக்கத்தைக் கொடுத்தனர். அதனால் 12 ஓவரில் 120 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் பெற்ற பஞ்சாப் கண்டிப்பாக 220 – 240 ரன்கள் அடிக்கும் வாய்ப்பை பெற்றது. ஆனால் அடுத்ததாக வந்த கிளன் மேக்ஸ்வெல் 7 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

- Advertisement -

கோப்பை வெல்லாது:

சுமாரான ஃபார்மில் இருக்கும் மேக்ஸ்வெல் இப்போட்டியிலும் ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் அடுத்து வந்த பகுதி நேர பேட்ஸ்மேன் மார்க்கோ யான்சனும் 3 (7) ரன்னில் நடையைக் கட்டினார். இறுதியில் ஸ்ரேயாஸ் ஐயர் 25* (16), ஜோஷ் இங்லிஷ் 11* (6) ரன்கள் அடித்தும் பஞ்சாப் 201/4 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஒருவேளை அப்போட்டியில் பஞ்சாப் தோல்வியை சந்தித்திருந்தால் அதற்கு எக்ஸ்ட்ரா 20 ரன்களை அடிக்காமல் தவற விட்டதே காரணமாக அமைந்திருக்கும்.

- Advertisement -

அதற்கு பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தான் காரணம் என்று முன்னாள் வீரர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார். குறிப்பாக நேஹல் வதேரா, சசாங் சிங் போன்ற இந்திய வீரர்கள் நல்ல ஃபார்மில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஆனால் அவர்களை மதித்து வாய்ப்பளிக்காத பாண்டிங் மோசமான ஃபார்மில் இருக்கும் மேக்ஸ்வெலுக்கு வாய்ப்பு கொடுத்ததாக விமர்சித்துள்ளார்.

திவாரி விளாசல்:

- Advertisement -

அது போக மிடில் ஆர்டரில் மார்கோ யான்சென், இங்லிஷ் போன்ற வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்புளிக்கும் பாண்டிங் தலைமையில் பஞ்சாப் கோப்பையை வெல்லாது என்றும் திவாரி சாடியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பகிர்ந்துள்ளது பின்வருமாறு. “பஞ்சாப் அணியால் இந்த வருட ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாது என்று என்னுடைய தைரியமான உணர்வு சொல்கிறது”

இதையும் படிங்க:

“ஏனெனில் இன்று அவர்களுடைய பயிற்சியாளர் நல்ல ஃபார்மில் இருக்கும் நேஹல் வதேரா, சசாங் சிங் போன்ற இந்திய வீரர்களை பேட்டிங் செய்ய அனுப்பவில்லை. மாறாக தன்னுடைய வெளிநாட்டு வீரர்களை நம்பினார். ஆனால் அந்த வெளிநாட்டு வீரர்களால் அசத்த முடியவில்லை. இது இந்திய வீரர்கள் மீது நம்பிக்கை இல்லாததைத் தெளிவாகக் காட்டுகிறது. பாண்டிங் இந்த வழியில் தொடர்ந்தால் புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களைப் பிடித்தாலும் பஞ்சாப் அணியிடமிருந்து கோப்பை வெகு தொலைவில் இருக்கும்” என்று கூறினார்.

Advertisement