பஞ்சாப் அணி தமிழக வீரரான ஷாருக் கான் விஷயத்தில் செய்வது மிகப்பெரிய தவறு – ரசிகர்கள் கொதிப்பு

நடப்பு ஐபிஎல் தொடரின் 11வது லீக் மேட்சில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று மோதின. முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு195 ரன்கள் எடுத்தது. பிறகு ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18.2வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்ததன் மூலமாக 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

stoinis

இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான நிக்கோலஸ் பூரன் தனது முதல் இரண்டு போட்டிகளிலும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி அந்த அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். அதேபோல் நேற்று நடைபெற்ற போட்டியிலும் அடித்து ஆட வேண்டிய சூழ்நிலையில் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 8 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே அடித்து மீண்டும் ஒருமுறை அந்த அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

இந்த தொடரில் தனது 2 வது போட்டியில் சென்னை அணியை எதிர்கொண்ட பஞ்சாப் அணி, பேட்டிங்கின்போது தொடர்ச்சியான விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அப்போது களமிறங்கிய தமிழக வீரரான ஷாருக்கான் ஒருபுறம் விக்கெட்டுகள் விழாமல் தடுத்ததுடன், அதிரடியாகவும் விளையாடினார். அந்த போட்டியில் 36 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்த்து களமிறக்கப்பட்ட பூரான் ஏமாற்றம் அளித்து வெளியேறினார்.

pooran

ஆனால் கடைசி கட்டத்தில் களமிறங்கிய ஷாருக்கான் ஐந்தே பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார் இதில் இரண்டு பவுண்டரியும் ஒரு சிக்சரும் அடக்கம். இந்தப் போட்டியை கண்ட பஞ்சாப் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் இனிவரும் போட்டிகளில் சொதப்பல் ஆட்டம் ஆடி வரும் நிக்கோலஸ் பூரன் இறங்கும் இடத்தில் தமிழக வீரரான ஷாருக்கானை களமிருக்கலாம் என்று அந்த அணிக்கு வலைத்தளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

- Advertisement -

shahrukh

ஏற்கனவே ஷாருக்கான் தமிழக அணிக்காக சையத் முஷ்டாக் அலி தொடரில் 5 ஆவது வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.