- Advertisement -
Categories: ஐ.பி.எல்

இதை செஞ்சு பஞ்சாப் என்னை அவமானப்படுத்துனாங்க.. உடைஞ்சு போய் ராகுலிடம் சொல்லிட்டு கிளம்புனேன்.. கெய்ல்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் 2012, 2016 டி20 உலகக் கோப்பைகளை வென்றவர். ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்துள்ள அவர் அதிகபட்ச ஸ்கோர் (175), வேகமான சதம், அதிக சிக்ஸர்கள் போன்ற உடைக்க முடியாத சாதனைகளைப் படைத்துள்ளார். அப்படிப்பட்ட அவர் ஐபிஎல் தொடரிலும் விளையாடி பல சாதனைகளைப் புரிந்துள்ளார்.

குறிப்பாக ஆர்சிபி அணிக்காக விளையாடிய அவர் நிறைய வெற்றிகளில் பங்காற்றினார். முன்னதாக 2018 சீசனில் பஞ்சாப்புக்காக விளையாட வாங்கப்பட்ட கிறிஸ் கெய்ல் கொஞ்சம் தடுமாற்றமாக விளையாடினார். அதனால் ஒரு கட்டத்துக்குப் பின் அவரை பஞ்சாப் நிர்வாகம் 3வது இடத்தில் களமிறக்க வைத்தது. அந்த வாய்ப்பில் சிறப்பாக விளையாடத் தவறிய அவர் ஒரு கட்டத்துக்கு பின் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.

- Advertisement -

அவமானப்படுத்திய பஞ்சாப்:

அந்த வகையில் பஞ்சாப் அணியில் அவருக்கு நிலையான வாய்ப்பும் ஆதரவும் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். அதனால் விரக்தியடைந்த கெய்ல் 2021 ஐபிஎல் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பாதியிலேயே பஞ்சாப் அணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இந்நிலையில் பஞ்சாப் அணி தம்மை அவமானப்படுத்தி வெளியேற வைத்ததாக கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

அந்த காலகட்டங்களில் லாக்டவுன் காரணமாக ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த தம்மை பஞ்சாப் நிர்வாகம் மோசமாக நடத்தியதாகவும் அவர் சாடியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “என் ஐபிஎல் கேரியர் பஞ்சாப் அணியில் முன்கூட்டியே முடிந்தது. பஞ்சாப் அணியால் நான் அவமதிக்கப்பட்டேன்”

- Advertisement -

வெளியேறிய கெய்ல்:

“அங்கே என்னை ஐபிஎல் தொடருக்காக நிறைய செய்து பிராண்ட் மதிப்பை கொண்டு வந்த சீனியர் வீரராக சரியாக நடத்தப்பட்டதாக உணரவில்லை. அதற்கு மாறாக அவர்கள் என்னை குழந்தையைப் போல் நடத்தினார்கள். அதனால் எனது வாழ்வில் முதல் முறையாக மன அழுத்தத்தில் விழுவது போல் உணர்ந்தேன். பணத்தை விட மன ஆரோக்கியம் முக்கியம். அனில் கும்ப்ளேவை (பயிற்சியாளர்) அழைத்த நான் வெளியேறுகிறேன் என்று சொன்னேன். அந்த சமயத்தில் உலகக் கோப்பையை கொண்டிருந்த நாங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தோம்”

இதையும் படிங்க: டி20 போட்டிகளில் நான் அடித்த 175 ரன்கள் சாதனையை முறியடிக்க இந்த 4 பேரால் முடியும் – கிரிஸ் கெயில் தேர்வு

“அது என்னுடைய மன ஆரோக்கியத்தை அழித்தது. மும்பைக்கு எதிரான என்னுடைய கடைசிப் போட்டிக்கு பின் தொடர்ந்து விளையாடினால் என்னை நானே பாதித்துக் கொள்வேன் என்று உணர்ந்தேன். அதனால் உடைந்து போன நான் கும்ப்ளேவிடம் பேசினேன். ஏனெனில் அவராலும் பஞ்சாப் அணி நகர்ந்த விதத்தாலும் நான் ஏமாற்றமடைந்தேன். என்னை அழைத்த கேப்டன் கேஎல் ராகுல் “கிறிஸ் கொஞ்சம் பொறுங்கள், அடுத்தப் போட்டியில் நீங்கள் விளையாடுவீர்கள்” என்று கூறினார். அதற்கு “உங்களுக்கு வாழ்த்துக்கள்” என்று அவரிடம் சொல்லிவிட்டு என்னுடைய பையை எடுத்துக்கொண்டு வெளியே நடந்தேன்” என்று கூறினார்.

- Advertisement -