டி20 போட்டிகளில் நான் அடித்த 175 ரன்கள் சாதனையை முறியடிக்க இந்த 4 பேரால் முடியும் – கிரிஸ் கெயில் தேர்வு

Gayle (1)
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டை சேர்ந்த முன்னாள் ஜாம்பவான் வீரரான கிரிஸ் கெயில் கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 66 பந்துகளை சந்தித்து 175 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அதுவே இதுவரை டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக உலகளாவிய சாதனையாக இருந்து வருகிறது. கடந்த 12 ஆண்டுகளில் இதுவரை யாராலும் அந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை. அதோடு இனியும் அந்த சாதனையை முறியடிப்பது கடினம் தான் என்று பார்க்கப்படுகிறது.

என்னுடைய சாதனையை முறியடிக்க இந்த 4 பேரால் முடியும் : கிரிஸ் கெயில்

அவருக்கு அடுத்து அதிகபட்சமாக டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஆரோன் பின்ச் 172 ரன்கள் அடித்துள்ளார். இதுவே கெயிலின் சாதனைக்கு மிக நெருக்கமாக சாதனையாக இருக்கிறது. இந்நிலையில் தன்னுடைய 175 ரன்கள் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள நான்கு வீரர்களை கிரிஸ் கெயில் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் தேர்வு செய்துள்ள அந்த நான்கு வீரர்கள் யாரெனில் : இந்திய வீரர்களான சுப்பன் கில், அபிஷேக்சர்மா மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். அவர்களை தவிர்த்து நான்காவது வீரராக நிக்கோலஸ் பூரானை தேர்வு செய்துள்ளார். இந்த நான்கு வீரர்கள் தான் தன்னுடைய 175 ரன்கள் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பட்டியலில் அபிஷேக் ஷர்மா ஏற்கனவே இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஐபிஎல் போட்டியில் 55 பந்துகளில் 151 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அதனால் கிட்டத்தட்ட இவரால் அந்த சாதனையை எட்ட முடியும் என்பது உண்மைதான். அதேபோன்று யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 62 பந்துகளில் 124 ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

சுப்மன் கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் 60 பந்துகளில் 129 ரன்கள் குவித்துள்ளார். இப்படி இவர்கள் மூவருமே அதிரடியான இளம் துவக்க ஆட்டக்காரர்கள் என்பதால் நிச்சயம் இந்த சாதனையை அவர்களால் எட்ட முடியும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது.

இதையும் படிங்க : எந்தக் குறையும் இல்லாத ஸ்ரேயாஸ்க்கு அதிர்ஷ்டம் இல்ல.. காத்திருந்தா நிச்சயம் அது கிடைக்கும்.. பார்திவ் படேல் அட்வைஸ்

அதேவேளையில் நான்காவது வீரராக அவர் நிக்கலஸ் பூரானை தேர்வு செய்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற நிக்கோலஸ் பூரான் டி20 போட்டிகளில் ஒட்டுமொத்தமாக நான்கு சதங்களை அடித்து இருந்தாலும் அவரின் அதிகபட்ச ரன் குவிப்பாக 108 ரன்களே இருக்கிறது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான அவரால் 175 ரன்களை விரட்ட முடியுமா? என்பது சந்தேகம்தான்.

Advertisement