கொரோனா பாதிப்பால் உணவு டெலிவரி செய்யும் வேலைக்கு செல்லும் சர்வதேச கிரிக்கெட் வீரர் – வைரல் நியூஸ் இதோ

Paul-van-meekeren

இந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக உலகெங்கிலும் மக்கள் வேலையில்லாமல் முடங்கினார். மேலும் பல்வேறு நாட்டு அரசாங்கங்களும் மக்கள் வெளியே வராமல் இருக்க கடுமையான விதிமுறைகளை வகுத்துள்ளன. இதனிடையே 13 லட்சம் பேர் இந்த கொடிய வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

Corona-1

மேலும் பலர் வேலையின்றி தவித்து வந்தனர். குறிப்பாக சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் காய்கறி விற்கும் நபராகவும், பிரபல கார் ரேஸ் வீராங்கனை ஒருவர் ஆபாச திரைப்பட நடிகையாக மாறி இருந்தனர். இதுபோன்ற செய்திகள் அவ்வப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதேபோன்று தற்போது இந்த ஆண்டு நடைபெற இருந்த ஐசிசி t20 உலகக் கோப்பை தொடரும் தள்ளிவைக்கப்பட்டது. மேலும் பல கிரிக்கெட் தொடர்கள் உலகெங்கும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்களும் அவரவர் நாட்டிலேயே முடங்கி வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

meekeren

இதன் காரணமாக நெதர்லாந்து அணியை சேர்ந்த இளம் வீரரான பால் வான் என்ற ஆல்ரவுண்டர் தற்போது 15 நவம்பர் மாதத்தை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அதன்படி இந்த நாளில் நான் கிரிக்கெட் விளையாடி இருக்க வேண்டும் ஆனால் தற்போது எனது செலவுகளுக்காக உணவுகளை டெலிவரி செய்து வருகிறேன் என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிலாக அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.