பாபர் அசாம் மற்றும் விராட் கோலியை மிஞ்சி டி20 கிரிக்கெட்டில் சாதனை நிகழ்த்திய அயர்லாந்து கேப்டன் – விவரம் இதோ

Sterling
- Advertisement -

பால் ஸ்டெர்லிங் தலைமையிலான அயர்லாந்து கிரிக்கெட் அணியானது தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரின் முதலாவது டி20 போட்டியானது மார்ச் 15-ஆம் தேதி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் முதலில் தங்களது அணி பந்து வீசுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து அயர்லாந்து அணியானது முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை குவித்தது.

- Advertisement -

அயர்லாந்து அணி சார்பாக அதிகபட்சமாக கர்டிஸ் கேம்பர் 56 ரன்களையும், பால் ஸ்டெர்லிங் 25 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்களை மட்டுமே குவித்தது.

அதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் அயர்லாந்து அணி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது விளையாடிய அயர்லாந்து அணியின் கேப்டன் ஃபால் ஸ்டெர்லிங் இரண்டு பவுண்டரிகளுடன் 25 ரன்களை குவித்து ஆட்டம் இழந்தார். அவர் அடித்த இந்த இரண்டு பவுண்டரிகள் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றினையும் அவர் நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : இதனால மட்டும் ரஞ்சிக் கோப்பையை காப்பாற்ற முடியாது.. அதையும் செய்ங்க.. பிசிசிஐக்கு கவாஸ்கர் கோரிக்கை

அந்த வகையில் சர்வதேச டி20 போட்டிகளில் முதல் வீரராக 400 பவுண்டரிகளை அடித்த வீரர் என்ற பட்டியலில் தற்போது பால் ஸ்டெர்லிங் முதலிடம் பிடித்துள்ளார். அவர் இதுவரை டி20 கிரிக்கெட்டில் 401 பவுண்டரிகளை அடித்துள்ளார். அவருக்கு அடுத்து பாபர் அசாம் 395 பவுண்டரிகளுடன் இரண்டாவது இடத்திலும், விராட் கோலி 361 பவுண்டரிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement