நவீன டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஆஸ்திரேலியாவின் நேதன் லயன் ஆகியோர் சிறந்த ஸ்பின்னர்களாக போற்றப்படுகிறார்கள். அதில் லயன் இதுவரை 129 போட்டிகளில் 530 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அந்த வகையில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அவர் ஷேன் வார்னே இடத்தை நிரப்பும் அளவுக்கு ஆஸ்திரேலியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.
மறுபுறம் 105 போட்டிகளில் 536 விக்கெட்டுகளை எடுத்துள்ள அஸ்வின் பேட்டிங்கிலும் அவ்வப்போது நல்ல ரன்கள் எடுத்து வருகிறார். அந்த வகையில் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் ஆகியோரது இடத்தை நிரப்பும் அளவுக்கு அசத்தி வரும் அவர் கடந்த 10 வருடங்களில் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். இந்த சூழ்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது.
சிறந்த ஸ்பின்னர்:
அந்தத் தொடரில் அவர்கள் இருவரும் சிறப்பாக செயல்பட்டு தங்களுடைய அணியின் வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்ற வேண்டிய நிலையில் உள்ளார்கள். இந்நிலையில் இந்தியாவின் அஸ்வினை விட ஆஸ்திரேலியாவின் நேதன் லயன் சிறந்த ஸ்பின்னர் என்று தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரர் பால் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
“இந்திய துணை கண்டம் மற்றும் ஆஸ்திரேலியா அல்லது தென்னாப்பிரிக்கா போன்ற சூழ்நிலைகளில் போட்டியிடும் வகையில் அஸ்வினை விட லயன் மிகவும் முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் என்று நான் நினைக்கிறேன். அஸ்வின் கேரம் பந்துகளை கொண்டுள்ளார். அதை வைத்து அவர் பந்தை எதிர்புறம் திருப்புகிறார். ஆனால் லயன் அதிகமாக ஓவர் ஸ்பின் பந்துகளை வீசுகிறார். அது பேட்ஸ்மேன்களுக்கு அதிக சவாலை கொடுக்கக் கூடியது”
இதையும் படிங்க:
“ஷமி விளையாடாதது ஆஸ்திரேலிய சூழ்நிலைகளில் இந்திய அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும். ஒருவேளை அவர் அணியில் இருந்திருந்தால் வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கக்கூடிய ஆஸ்திரேலிய மைதானங்களில் இந்தியாவின் கை ஓங்கி இருக்கும். எனவே அவர் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கலாம்” என்று கூறினார். இருப்பினும் ஷமி தற்போது குணமடைந்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடத் துவங்கியுள்ளார்.
இதையும் படிங்க: சதம் அடித்த பிறகு ஓய்வைறையை பார்த்து முத்தங்களை பறக்கவிட்டது ஏன்? – திலக் வர்மா கொடுத்த விளக்கம்
அதனால் விரைவில் அவர் இந்திய அணிக்காக ஆஸ்திரேலியாவில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் இந்தியா வெற்றி பெற்று சாதனை படைத்தது. அதே உத்வேகத்துடன் இம்முறையும் ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெறுவதற்கு இந்தியா போராட உள்ளது குறிப்பிடத்தக்கது.



