6 விக்கெட்ஸ்.. ஃபைனலில் கமின்ஸ் எந்த கேப்டனும் செய்யாத உலக சாதனை.. 32 வருட சாதனை தகர்ப்பு

Pat cummins aus
- Advertisement -

ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 11ஆம் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் சென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா போராடி 212 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 66, வெப்ஸ்டர் 72 ரன்கள் எடுத்தார்கள்.

தென்னாபிரிக்கா அணிக்கு அதிகபட்சமாக ககிஸோ ரபாடா 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நாங்களும் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்ற வகையில் ஆஸ்திரேலியா பௌலிங் செய்தது. அதை சமாளிக்க முடியாமல் தடுமாறிய தென்னாப்பிரிக்கா வெறும் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஏமாற்றத்தைச் சந்தித்தது.

- Advertisement -

கமின்ஸ் அபாரம்:

அதிகபட்சமாக கேப்டன் பவுமா 36, டேவிட் பேடிங்கம் 45 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலிய அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 6 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார். குறிப்பாக 18.1 ஓவரில் வீசிய அவர் 6 மெய்டன் போட்டு 28 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு 74 ரன்களை முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

இதன் வாயிலாக கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த கேப்டன் என்ற உலக சாதனையை கமின்ஸ் படைத்துள்ளார். இதற்கு முன்பாக 1992ஆம் ஆண்டு இதே மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து கேப்டன் பாப் வில்லிஸ் 101 ரன்களை கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்ததே முந்தைய சாதனை.

- Advertisement -

ஃபைனலில் உலக சாதனை:

அதை விட ஐசிசி தொடரின் இறுதிப் போட்டியில் 5 விக்கெட் ஹால் எடுத்த முதல் கேப்டன் என்ற மாபெரும் உலக சாதனையையும் கமின்ஸ் படைத்துள்ளார். அவருக்கு முன் வேறு எந்த கேப்டனும் ஐசிசி தொடரின் ஃபைனலில் 5 விக்கெட்டுகள் எடுத்ததில்லை. இது போக டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை எடுத்து கமின்ஸ் மற்றும் ஒரு மைல்கல்லை தொட்டுள்ளார்.

இதையும் படிங்க: இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான தனது பிளேயிங் லெவனை வெளியிட்ட உத்தப்பா – லிஸ்ட் இதோ

அவருடைய அற்புதமான பவுலிங் காரணமாக இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலியா கோப்பையை வெல்வதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. அதன் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்க வைத்து சரித்திரம் படைக்க ஆஸ்திரேலியாவுக்கு பொன்னான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement