- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்த போட்டியில் இந்திய அணியை நாங்கள் எளிதில் வீழ்த்த இதுவே காரணம் – பேட் கம்மின்ஸ் மகிழ்ச்சி

மெல்போர்ன் நகரில் கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி துவங்கிய “பாக்சிங் டே” டெஸ்ட் போட்டியானது இன்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் தற்போதைய நிலையில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

இந்திய அணியை வீழ்த்த இதுவே காரணம் :

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 474 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய இந்திய அணியானது 369 ரன்களை குவித்தது. அதன் பின்னர் 105 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 234 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் தொடர்ந்து தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 155 ரன்களுக்கு ஆட்டமிழக்கவே ஆஸ்திரேலியா அணி 154 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் :

உண்மையிலேயே இந்த போட்டி மிகச் சிறப்பான ஒரு போட்டியாக அமைந்தது. இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்துள்ளது. இந்த போட்டியை காண ரசிகர்கள் மைதானத்திற்கு பெருமளவில் வந்தது உண்மையிலேயே எங்களுக்கு சாதகமாக இருந்தது. இந்த போட்டியில் ஒவ்வொருவரும் எங்களது வெற்றிக்கு பங்களித்ததில் மகிழ்ச்சி.

- Advertisement -

இரண்டாவது இன்னிங்ஸின்போது லாபுஷேன் மிகச் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து எங்களை மீட்டெடுத்தார். முதல் இன்னிங்சில் ஸ்டீவ் ஸ்மித் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்சின் போது 400 ரன்கள் அடித்தது எங்களுக்கு சாதகமாக இருந்தது.

இதையும் படிங்க : நான்காவது டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்கு இதுவே காரணம் – வருத்தத்தை தெரிவித்த ரோஹித் சர்மா

அதேபோன்று இரண்டாவது இன்னிங்ஸில் 30 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த போதும் மிடில் ஆர்டரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களது வீரர்கள் தங்களது முதிர்ச்சியை காண்பித்திருந்தனர். உண்மையிலேயே இந்த போட்டியின் முடிவில் நாங்கள் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி என பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -