சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்றைய சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 63-வது லீக் போட்டியில் விளையாடிய பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி இந்த போட்டியில் அசத்தலான வெற்றியை பதிவு செய்ததோடு மட்டுமின்றி பிளே ஆப் வாய்ப்பையும் உறுதி செய்தது.
சி.எஸ்.கே அணியை வீழ்த்தியது குறித்து பேசிய : பேட் கம்மின்ஸ்
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சி.எஸ்.கே அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை குவித்தது. பின்னர் 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியதாவது : இந்த போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் திருப்தி அளிக்கிறது. ஏனெனில் இந்த மைதானம் பேட்டிங்கிற்கு கடினமாக இருந்தது. இருந்தாலும் ஹென்றிச் கிளாஸன் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி எங்கள் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த போட்டியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக நான் பார்ப்பது பார்ட்னர்ஷிப்பை மட்டும் தான். ஏனெனில் பேட்டிங் செய்ய கடினமான இந்த ஆடுகளத்தில் ஒன்று முதல் இரண்டு நல்ல பாட்னர்ஷிப் வந்தால் இந்த 180 ரன்களை எளிதாக துரத்தலாம் என்று நம்பினேன். புதிதாக வரும் பேட்ஸ்மேன்கள் இந்த ஆடுகளத்தில் விளையாடுவது மிகவும் கடினம் என்பதனால் நல்ல பாட்னர்ஷிப் வந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்று நினைத்தேன்.
இதையும் படிங்க : 19 ஆவது ஓவர் வரை போட்டியில் இருந்தோம்.. சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான தோல்வி குறித்து – ருதுராஜ் பேச்சு
அந்த வகையில் கிளாஸன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து எங்கள் அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளனர். இந்த போட்டியில் அடைந்த வெற்றி எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளித்திருக்கிறது என பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.



