15.50 கோடி கிடைக்கும் ஐ.பி.எல் எனக்கு வேண்டாம். அதுக்கு பதிலாக இந்த தொடரில் ஆடுவதே எனது லட்சியம் – பேட் கம்மின்ஸ் அதிரடி

Cummins
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக உலகெங்கிலும் தற்போது அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் விளையாட்டு வீரர்கள் அனைவரும் செய்வதறியாது வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளும் நடைபெற அடுத்த சிலமாதங்களுக்கு வாய்ப்பில்லை.

Cummins 2

- Advertisement -

எப்பொழுதும் பல்வேறு வெளிநாடுகளுக்கு பரபரப்பாக சுற்றி வந்த கிரிக்கெட் வீரர்கள் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மேலும் இந்தியாவில் நடைபெறவிருந்த இந்தாண்டு ஐபிஎல் தொடரும் தற்போது துவங்கும் சூழ்நிலையில் இல்லை. நிலைமை கைமீறி சென்றுவிட்டதால் இந்த தொடர் ரத்து செய்யவே அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும் இந்த தொடர் ரத்து செய்ய செய்யப்பட்டால் வீரர்களுக்கு சம்பளப் பணம் வழங்கப்படாது. இதனால் யாருக்கு பெரிய பாதிப்போ இல்லையோ இந்த வருடம் அதிக தொகைக்கு ஏலம் போன பேட் கம்மின்ஸ்( கொல்கத்தா அணிக்காக 15.5 கோடி ரூபாய்) மிகுந்த பாதிப்பாக அமையும்.

Cummins 1

இந்நிலையில் அவர் இந்த ஐபிஎல் தொடர் குறித்து பேசுகையில் : எனக்கு ஒரு பேராசை நிலைமை அனைத்தும் சரியாக இருந்தால் பணம் பொழியும் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க விரும்புகிறேன். ஆனால் தற்போதைக்கு ஐபிஎல்-யை விட ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 உலகக் கோப்பைத் தொடர்தான் எனக்கு முக்கியமாகப் படுகிறது.

- Advertisement -

ஏனெனில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக டி20 உலகக் கோப்பை குறித்து நான் அணி வீரர்களிடம் அதிகமாக பேசி வருகிறேன். மேலும் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஒரு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நான் பங்கேற்காதது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. மேலும் அதற்கடுத்து நான் விளையாட இருக்கும் மிகப்பெரிய தொடர் இந்த டி20 உலகக் கோப்பைத் தொடர்தான்.

PatCummins

எனவே நிச்சயம் இந்த தொடரில் பங்கேற்று ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பான செயல்பாட்டை அளிக்க காத்திருக்கிறேன். உலகக்கோப்பை போட்டிகளில் இது மிகப்பெரிய தொடராக நான் கருதுகிறேன். இந்த தொடரில் நான் விளையாட ஆவலாக இருக்கிறேன் என்றும் அதே வேளையில் ஐபிஎல் நடைபெற்றால் அதனை தவறவிடாமல் விளையாடவும் நான் விரும்புகிறேன் என்று பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement