சாம்பியன்ஸ் டிராபி மிஸ் ஆகிடுச்சு.. ஆனா இந்தியாவுல அந்த கப் மிஸ் ஆகாது – பேட் கம்மின்ஸ் அதிரடி

Cummins
- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் இந்திய அணிக்கு எதிராக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி அசத்தியிருந்தார். அந்த தொடரின் போது ஏற்பட்ட காயத்தால் அவர் அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகி இருந்தார்.

என்னுடைய அடுத்த டார்கெட் இதுதான் : பேட் கம்மின்ஸ்

மேலும் காயம் குணமடையாத காரணத்தினால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாகவும் அவர் தனது காயத்தை கருத்தில் கொண்டு தான் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவில்லை என்று அறிவித்து வெளியேறினார். அதன் காரணமாக தற்போது ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியானது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் காயத்திலிருந்து மெல்ல மெல்ல குணமடைந்து வரும் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தன்னுடைய அடுத்த திட்டம் என்ன? என்பது குறித்து சில முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னுடைய கணுக்கால் காயம் தற்போது குணமடைந்து நல்ல முறையில் வலுவடைந்து கொண்டு வருகிறது.

போதிய அளவு ஓய்வு கிடைத்ததால் என்னால் காயத்திலிருந்து மீண்டு வர முடிந்துள்ளது. அதிகப்படியான கிரிக்கெட் போட்டிகளை விளையாடும் போது காயத்திலிருந்து விரைவாக மீள முடியாது. ஆனால் தற்போது நான் சரியான ஓய்வை எடுத்துக் கொண்டதால் மீண்டும் குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்பி வந்துள்ளேன். என்னுடைய அடுத்த திட்டம் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நான் முழு உடலற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதுதான்.

- Advertisement -

அப்போதுதான் அந்த கோப்பையை கைப்பற்ற போராட முடியும். இன்னும் ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு சில வாரங்கள் எஞ்சியுள்ளதால் அதற்குள் மீண்டும் பந்துவீசும் அளவிற்கு உடற்தகுதியை மேற்படுத்திக்கொண்டு இந்தியாவிற்கு வந்து ஐபிஎல் தொடரில் விளையாடுவேன். அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் போது காயங்கள் ஏற்படுவது வாடிக்கைதான்.

இதையும் படிங்க : 10 வெற்றிகள்.. இனிமேலும் அப்செட்ன்னு சொல்லாதீங்க.. இந்தியாவுக்கு பின் சாதிக்கும் ஆப்கனை வாழ்த்திய சச்சின்

எனவே சில சுற்றுப் பயணங்களை தவிர்ப்பதன் மூலமாக ஆண்டு முழுவதும் விளையாடாதவாறு பார்த்துக் கொள்ளலாம். எனவே தற்போது நான் முக்கிய தொடர்களை மட்டுமே தேர்வு செய்து அதில் விளையாட முடிவு செய்துள்ளதாக பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement