15.50 கோடியை என்ன பண்றதுனு தெரியல என்று கூறிய கம்மின்ஸ். ஆனால் அவரது காதலி என்ன சொல்லி இருக்காங்க பாருங்க

Cummins-3
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவினால் ஐபிஎல் தொடர் வரும் 2020ஆம் ஆண்டு 13 ஆவது ஐபிஎல் தொடராக நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்த நிலையில் கடந்த 19ஆம் தேதி ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலம் நடைபெற்று முடிந்தது.

Cummins

- Advertisement -

இந்த ஏலத்தில் அனைத்து முன்னணி அணிகளும் தங்கள் அணிக்காக வீரர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். அதில் இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு 15.50 கோடி ரூபாய்க்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னணி வீரரான பேட் கம்மின்ஸ் ஏலம் போனார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை 15.50 கோடி ரூபாய் பணம் கொடுத்து ஏலத்தில் வாங்கியது.

இந்நிலையில் இந்த ஐ.பி.எல் பணம் குறித்து பாக்சிங் டே டெஸ்டில் பங்குபெறும் கம்மின்ஸ் கூறியதாவது : ஐபிஎல் கிடைக்கும் இந்த பணத்தை வைத்து என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. என் காதலி என்னிடம் உடனே சொன்னார் இந்த பணத்தால் நம் நாய்க்கு நிறைய விளையாட்டு பொருட்களை வாங்கலாம் என்று அவர் கூறினார்.

Cummins 2

இந்த பணத்தால் நான் மாறக் கூடாது என நினைக்கிறேன். நல்லவேளையாக என்னை சுற்றி நல்ல மனிதர்கள் பலர் உள்ளனர். நான் இன்னும் கிரிக்கெட் விளையாடுவதற்கு காரணம் அதை நான் மிகவும் விரும்பி விளையாடுகிறேன். நான் மிகவும் கொடுத்து வைத்தவன் என்று கம்மின்ஸ் கூறினார்.

Advertisement