இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது மார்ச் 28-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் இந்த தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியின் வீரர்களை ஒன்றிணைத்து சொந்த மைதானங்களில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
இஷான் கிஷன் நிச்சயம் சிறப்பாக அணியை வழி நடத்துவார் : பேட் கம்மின்ஸ்
இந்நிலையில் இந்த 2026 ஐபிஎல் தொடருக்கான சன் ரைசர்ஸ் அணியின் புதிய கேப்டனாக இஷான் கிஷன் அறிவிக்கப்பட்டுள்ளார். ஏனெனில் ஏற்கனவே சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்த பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக 2026 டி20 உலக கோப்பை தொடரை தவறவிட்டார். அதன் பின்னர் இன்னும் அவர் முழு உடற்தகுதியை எட்டாததால் இந்த ஐபிஎல் தொடரில் எப்போது பங்கேற்பார்? என்பது உறுதியாகவில்லை.
இதன் காரணமாக இஷான் கிஷன் அந்த அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டு அவரது தலைமையின் கீழ் சன் ரைசர்ஸ் அணியானது ஆரம்பகட்ட போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் காயத்திலிருந்து மீண்டும் தான் எப்போது ஐபிஎல் போட்டிகளுக்கு வருவேன்? என்பது குறித்தும் இஷான் கிஷன் புதிய கேப்டன் பதவி குறித்தும் சில கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : தற்போது நான் நல்ல வகையில் காயத்திலிருந்து மீண்டு வந்து கொண்டே இருக்கிறேன். தற்போது மெல்ல மெல்ல வலைப்பயிற்சியில் பந்து வீசவும் ஆரம்பித்து விட்டேன். என்னால் இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் விளையாட முடியவில்லை என்றாலும் நிச்சயம் இந்த தொடரின் பாதியில் சன் ரைசர்ஸ் அணியுடன் இணைந்து விளையாடுவேன். அதேபோன்று இஷான் கிஷன் கேப்டனாக நியமிக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சி தான்.
இதையும் படிங்க : டி20 வேர்ல்டுகப்ல என்னை நீக்கியதும்.. எனக்கு பர்ஸ்ட் மெசேஜ் அனுப்புனது பாண்டியா தான் – ஜிதேஷ் சர்மா நெகிழ்ச்சி
ஏனெனில் ஏற்கனவே அவருக்கு கேப்டன்சி அனுபவம் உள்ளதை நாம் கடந்த ஆண்டு பார்த்துள்ளோம். அவர் கடந்த ஆண்டு உள்ளூர் போட்டிகளில் ஜார்கண்ட் அணிக்காக மிகச்சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று கொடுத்துள்ளார். எனவே அவருக்கு கேப்டன்சி அனுபவம் இருக்கிறது. அதுமட்டும் இன்றி எங்களது அணியில் உள்ள வீரர்கள் அனைவருமே திறமையான வீரர்கள் அதன் காரணமாக அவரால் நிச்சயம் வெற்றிகரமாக எங்களது அணியை வழிநடத்த முடியும் என்றும் பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.



