IND vs AUS : அவங்க 2 பேருக்கு எதிரா பந்து வீச எனக்கே கஷ்டமா தான் இருக்கும்.. இந்தியாவை வீழ்த்திய பின் – பேட் கம்மின்ஸ் பேட்டி

Pat Cummins 3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பைக்கு இறுதிக்கட்டமாக தயாராகும் வகையில் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டியில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. மறுபுறம் ஆசிய கோப்பை வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறி சாதனை படைத்தது.

அந்த நிலையில் செப்டம்பர் 27ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற்ற சம்பிரதாய கடைசி போட்டியில் டாஸ் வென்ற இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த ஆஸ்திரேலியா அதிரடியாக விளையாடி 50 ஓவர்களில் 352/7 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டேவிட் வார்னர் 56 (34), மிட்சேல் மார்ஷ் 96 (84), ஸ்டீவ் ஸ்மித் 74 (61), மார்னஸ் லபுஸ்ஷேன் 72 (58) ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

கமின்ஸ் மகிழ்ச்சி:
அதை தொடர்ந்து 353 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 81, விராட் கோலி 56, ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்கள் எடுத்து போராடி அவுட்டானார்கள். ஆனால் வித்தியாச முயற்சியாக துவக்க வீரராக களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 18, கேஎல் ராகுல் 26, சூர்யகுமார் யாதவ் 8, ரவீந்திர ஜடேஜா 35 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அந்தளவுக்கு பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு 5 தொடர் தோல்விகளுக்கு பின் 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா ஒய்ட்வாஷ் தோல்வியை தவிர்த்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கிளன் மேக்ஸ்வெல் 4 விக்கெட்களை எடுத்தார். இருப்பினும் முக்கிய வீரர்கள் இல்லாமல் இப்போட்டியில் தோற்றாலும் 2 – 1 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்ற இந்தியா உலகக்கோப்பை வெல்வதற்கு தயாராக இருக்கிறோம் என்பதை காட்டியுள்ளது. இந்நிலையில் மேக்ஸ்வெல், ஸ்டார்க் போன்ற முக்கிய வீரர்கள் காயத்திலிருந்து குணமடைந்து இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டதால் கிடைத்த வெற்றி மகிழ்ச்சியை கொடுப்பதாக ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஆனால் இன்னும் சில வீரர்கள் காயமடைந்துள்ள நிலையில் வார்னர் – மார்ஷ் ஆகியோருக்கு வலைப்பயிற்சியில் பந்து வீசினால் காயமடைந்து விடுவார்களோ என்ற கவலையையும் வெளிப்படுத்தும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இங்கு நிலவிய வெப்பத்தில் பகலை விட இரவில் பங்கு வீசியதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் மேக்ஸ்வெல் 4 விக்கெட்களை எடுத்த நிலையில் ஸ்டார்க் நல்ல ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இருப்பினும் டிராவிஸ் ஹெட் உலக கோப்பையின் துவக்க போட்டிகளில் ஃபிட்டாக இருக்க மாட்டார்”

இதையும் படிங்க: IND vs AUS : ஆஸி ஆறுதல் வெற்றி.. 2023 உ.கோ முன் சேசிங் செய்ய முடியாத மைதானத்தில் தவறான முடிவால் இந்தியா தோற்றது எப்படி?

“அதே சமயம் மிட்சேல் மார்ஷ் – வார்னர் ஆகியோருக்கு எதிராக வலைப்பயிற்சியில் பவுலிங் செய்வதை பற்றி சற்று நான் கவலையடைந்துள்ளேன். அஸ்டன் அகர் வீட்டுக்கு திரும்பியுள்ள நிலையில் டிராவிஸ் ஹெட் அடுத்த சில வாரங்களுக்கு விளையாட மாட்டார். இருப்பினும் இந்த வெற்றி மகிழ்ச்சியை கொடுக்கும் நிலையில் கிட்டத்தட்ட நாங்கள் முழுபலத்துடன் கூடிய அணியை உலகக் கோப்பைக்கு முன் பெற்றுள்ளோம்” என்று கூறினார்.

Advertisement