IND vs AUS : இந்த மேட்ச் போனா பரவாயில்ல. எங்க போகஸ் ஃபுல்லா அந்த பெரிய தொடர் மீதுதான் – தோல்விக்கு பிறகு கம்மின்ஸ் பேட்டி

Pat Cummins 2
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் களமிறங்கியுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. அதனால் ஆசிய கோப்பையின் வெற்றி நடையை தொடரும் இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2023 உலகக் கோப்பையில் களமிறங்குவதற்கு முழுமையாக தயாராகியுள்ளது. செப்டம்பர் 22ஆம் தேதி மொஹாலியில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 276 ரன்கள் சேர்த்தது.

சராசரியான பேட்டிங்கை வெளிப்படுத்தி அந்த அணிக்கு அதிகபட்சமாக டேவிட் வார்னர் 52, ஜோஸ் இங்லிஷ் 45 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 300 ரன்களை தொடவிடாமல் பாதி வெற்றியை உறுதி செய்தார். மீதி வெற்றியை 227 ரன்களை சேசிங் செய்கையில் கில் 74, ருதுராஜ் 71 ரன்கள் எடுத்து உறுதி செய்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் 3, இஷான் கிசான் 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

தெம்பான கமின்ஸ்:
இருப்பினும் மிடில் ஆர்டரில் நீண்ட நாட்கள் கழித்து அசத்திய சூரியகுமார் யாதவ் 50 ரன்களும் கேஎல் ராகுல் 58* ரன்களும் எடுத்து 48.4 ஓவரிலேயே இந்தியாவை வெற்றி பெற வைத்தனர். அதனால் பந்து வீச்சிலும் சற்று தடுமாற்றமாக செயல்பட்டு தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் மேக்ஸ்வேல், ஸ்டார்க் போன்ற மேலும் சில முக்கிய வீரர்கள் காயத்தால் விளையாடாத காரணத்தால் இப்போட்டியில் கிடைத்த தோல்விக்காக வருத்தப்படவில்லை என்று ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் 2023 உலகக்கோப்பை தான் தங்களுடைய முதன்மை இலக்கு என்று தெரிவிக்கும் அவர் அதற்கு முன்பாக இது போன்ற தோல்விகளை தாண்டி தங்களுடைய வீரர்கள் ஃபார்முக்கு வருவதே முக்கியம் என்று தெம்பாக பேசியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “காயத்திற்கு பின் குணமடைந்து இந்தியாவில் என்னுடைய முதல் போட்டியில் விளையாடியது மகிழ்ச்சியை கொடுக்கிறது. எங்களுடைய அணியில் சில வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்தனர். சிலர் நன்றாக பவுலிங் செய்தனர். ஆனால் மொத்தமாக அது போதுமானதாக இல்லை. மேலும் எங்களுடைய முக்கிய வீரர்கள் 2வது போட்டிக்கு தயாராக இல்லை. 3வது போட்டியில் தான் விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: கை கொடுத்த யுவி.. மொஹாலி மைதானத்தில் கூட அஷ்வினுக்கு ஆதரவு கொடுக்காத ஹர்பஜன் சிங் – ஆச்சர்யமான புள்ளிவிவரம்

“குறிப்பாக மேக்ஸ்வெல் இப்போது தான் இந்தியாவுக்கு வந்துள்ளார். ஸ்மித் முதல் முறையாக விளையாடியுள்ளார். வார்னர் நன்றாக விளையாடினார். எனவே இவர்கள் ஒன்றாக விளையாடுவதை பார்ப்பது நன்றாக இருக்கிறது. அதே சமயம் எங்களுடைய பார்வை அனைத்தும் உலக கோப்பையில் தான் இருக்கிறது. அதற்கு முன்பாக இது போன்ற தொடரில் நன்றாக விளையாடி ஃபார்முக்கு திரும்புவது முக்கியம்” என்று கூறினார்.

Advertisement