ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாட உள்ளது. நவம்பர் மாதம் துவங்கும் அந்தத் தொடரில் இந்தியாவை வீழ்த்த ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது. ஏனெனில் கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் இந்தியா முதல் முறையாக வென்று வரலாறு படைத்தது.
அதே போல இம்முறையும் ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெற இந்தியா தயாராகி வருகிறது. முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர துவக்க வீரர் டேவிட் வார்னர் 2024 ஜனவரி மாதத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார். அவருக்குப் பின் அந்த இடத்தில் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் பெரிய ரன்கள் குவிக்கவில்லை.
கமின்ஸ் பதில்:
அதனால் இம்முறை அவரை 4வது இடத்தில் மீண்டும் விளையாட வைக்க உள்ள ஆஸ்திரேலியா யாரை துவக்க வீரராக களமிறக்கலாம் என்று யோசித்து வருகிறது. அந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய நிர்வாகம் விரும்பினால் தாம் இந்தியாவுக்கு எதிராக ஓய்விலிருந்து மீண்டு வந்து துவக்க வீரராக விளையாட விரும்புவதாக டேவிட் வார்னர் நேற்று முன்தினம் கூறியிருந்தார். இந்நிலையில் அந்த அவசியம் உருவாகவில்லை என்று அவருக்கு ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் கூறியுள்ளார்.
மேலும் பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இந்தியாவை நாங்கள் வீழ்த்துவதை வர்ணனையாளராக மட்டும் பாருங்கள் என்றும் அவருக்கு கமின்ஸ் கிண்டலான பதிலை கொடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வார்னரும் நாங்களும் ஆர்வமாக உள்ளோம். நாங்கள் அதை மிகவும் தீவிரமாக பேசி தொடர்பில் உள்ளோம். அவரிடம் சில நாட்கள் முன்பாக நான் பேசினேன்”
சாரி நண்பா:
“அப்போது இந்த கோரிக்கையை அவர் என்னிடம் வைத்தாரா? இல்லையா? என்பது எனக்குத் தெரியவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அவர் என்னிடம் கேட்டார். அப்போது சிட்னி தண்டர் அணிக்காக பிக்பேஷ் தொடரில் அசத்துவதற்கு வாழ்த்துக்கள் என்று அவர்களிடம் சொன்னேன். மேலும் பாக்ஸ் தொலைக்காட்சியில் உங்களுடைய வர்ணனையை கேட்க ஆர்வத்துடன் உள்ளதாகவும் வார்னரிடம் சொன்னேன்”
இதையும் படிங்க: தயாராகும் 333 ரன்ஸ் ஆஸி போன்ற தோல்வி.. இந்தியா 107/7.. 12 வருட சாதனையை உடைக்கப் போகும் நியூஸிலாந்து?
“மீண்டும் எங்கள் பக்கத்தில் வருவதற்கு கவலைப்பட மாட்டார் என்று நினைக்கிறேன். வார்னரை நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அவர் ஓய்வு பெற்று விட்டார். சாரி நண்பா” என்று கூறினார். இதையடுத்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியாவை நொறுக்கிய டிராவிஸ் ஹெட் புதிய துவக்க வீரராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



