நாம நெனைச்சது வேறு. நடந்தது வேறு. கொல்கத்தா அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்ற பவுலர் – விவரம் இதோ

- Advertisement -

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல்லின் 15வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. விறுவிறுப்பாக சென்ற இப் போட்டியில் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணியின் ஓப்பனர்களான ருத்துராஜ் கெய்க்வாட் 42 பந்துகளில் 64 ரன்களும் , டுயூப்ளசிஸ் 60 பந்துகளில் 95 ரன்களும் எடுக்க 20 ஓவரில் சென்னை அணி 220 ரன்கள் அடித்தது.

ruturaj

- Advertisement -

221 என்ற கடினமான இலக்கை செஸ் செய்த கொல்கத்தா அணி பவர் ப்ளே முடிவதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது. பிறகு தினேஷ் கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்தார் அன்டரு ரஸல். அதிரடியாக விளையாடிய ரஸல் 22 பந்துகளில் 54 ரன்கள் அடித்து 12வது ஓவரில் வெளியேறினார். இனிமேல் கொல்கத்தா அணியில் பவர் ஹிட்டர்கள் யாரும் இல்லை என்று பெருமூச்சு விட்டார்கள் சென்னை ரசிகர்கள். ஆனால் நடந்ததோ வேறு.

ரசல் அவுட் ஆனதும் களமிறங்கிய பேட் கம்மின்ஸ், வந்தது முதலே அடித்து ஆட ஆரம்பித்தார். இதற்கிடையில் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் 15வது ஓவரின் கடைசி பந்தில் வெளியேறினார். கடைசி 30 பந்துகளில் கொல்கத்தா அணி வெற்றி பெற 75 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 16வது ஓவரை சாம் கரன் வீச அந்த ஓவரில் 4 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார் பேட் பம்மின்ஸ்.

cummins

அந்த ஓவரில் மட்டும் 30 ரன்கள் அடித்திருந்தார் கம்மின்ஸ். அதுவரை சென்னைப் பக்கம் சென்றுகொண்டிருந்த மேட்ச்சானது தலைகீழாக மாறியது. பின் சுதாரித்துக் கொண்ட சென்னை பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி வெற்றியை வசப்படுத்தினர். பேட் கம்மின்ஸுடன் தினேஷ் கார்த்திக் அல்லது ரசல் இருவரில் யாரேனும் ஒருவர் இருந்திருந்தால் வெற்றியானது கொல்கத்தா வசம் போயிருக்கும்.

cummins 1

ரஸல் அவுட்டானதும் மேட்ச் கைவிட்டு சென்றுவிட்டது என்று கொல்கத்தா ரசிகர்கள் நினைத்திருந்த வேளையில், தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் போட்டியை இறுதிவரை அழைத்துச் சென்ற பேட் கம்மின்ஸிற்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இறுதிவரை வெற்றிக்கு போராடிய கம்மின்ஸ் 34 பந்துகளில் 64 ரன்கள் குவித்து நாட் அவர் பேட்ஸ்மேனாக வெளியேறினார். அவரது இந்த அசாதரணமான ஆட்டத்திற்கு இறுதியில் தோனி வாழ்த்துக்களை கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement