என்னை சிரிக்க வைக்கும் அவர் தான் இந்தியாவின் துருப்புச்சீட்டு.. அந்த 2 பேரையும் சமாளிப்போம்.. கமின்ஸ்

Pat Cummins
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா தங்களது சொந்த மண்ணில் விளையாடும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை நவம்பர் மாதம் துவங்குகிறது. கடைசியாக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 2 தொடர்களிலும் இந்திய அணியிடம் ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்தது. அதனால் இம்முறை எப்படியாவது இந்தியாவை ஆஸ்திரேலிய அணி தயாராகி வருகிறது.

சொல்லப்போனால் இந்தியாவுக்கு எதிராக பார்டர் – கவாஸ்கர் கோப்பையை கடைசியாக ஆஸ்திரேலியா 2014ஆம் ஆண்டு வென்றது. அதன் பின் 10 வருடங்களாகியும் அந்த அணியால் இந்தியாவை வீழ்த்த முடியவில்லை. எனவே இம்முறை இந்தியாவின் வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆஸ்திரேலியா வெல்லும் என்று கேப்டன் பட் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சிரிக்க வைப்பாரு:

அத்துடன் ஸ்டம்ப்களுக்கு பின்னால் நின்று ஏதாவது பேசிக்கொண்டே இருக்கும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தம்மை சிரிக்க வைக்கக் கூடியவர் என்றும் கமின்ஸ் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த முறை ஆஸ்திரேலியாவில் விளையாடிய போது ரிஷப் பண்ட் மிகச்சிறந்த தொடரை கொண்டிருந்தார் அவர் மிடில் ஆர்டரில் எப்போதும் கொஞ்சம் துருப்புச்சீட்டாக செயல்படக் கூடியவர்”

“அவர் எப்படி விளையாடுவார் என்பது உங்களுக்கு தெரியாது. அது எதிரணியாக இருந்தாலும் உங்களுக்கு சுவாரசியத்தை கொடுக்கும். ஸ்டம்ப்களுக்கு பின்னால் நின்று கொண்டு அவர் எப்போதும் ஏதாவது வேடிக்கையாக சொல்வார். அது என்னை சிரிக்க வைக்கும். தற்போது சிறிய இடைவெளியில் இருக்கும் நாங்கள் இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடருக்கு ஆர்வத்துடன் உள்ளோம்”

- Advertisement -

இந்தியாவை வீழ்த்துவோம்:

“கடந்த சில டெஸ்ட் தொடர்களில் இந்தியாவுக்கு எதிராக எங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. ஆனால் நாங்கள் எப்போதும் ஆஸ்திரேலியாவில் பெருமையுடன் விளையாடுகிறோம். கடந்த 2 தொடர்கள் நடந்து நீண்ட காலமாகி விட்டது என்பதால் நாங்கள் அந்த தோல்விகளிலிருந்து வெளியே வந்து விட்டோம். கடந்த தொடர் காபாவில் கடைசி மணி நேரம் வரை சுவாரசியமாக சென்றது”

இதையும்படிங்க: ஜஸ்ப்ரித் பும்ராவை விட எங்காளு தான் சிறந்த பவுலர்.. பாகிஸ்தான் வீரர் பெருமை பாடும் பேட்டி

“துரதிஷ்டவசமாக எங்களால் அதில் வெற்றி பெற முடியவில்லை. அந்தத் தொடரில் இருந்த பெரும்பாலான வீரர்கள் இம்முறையும் எங்கள் அணியில் உள்ளனர். எனவே அந்த தோல்வியை இம்முறை நாங்கள் திருத்துவதற்காக இங்கே உள்ளோம். சுப்மன் கில்லுக்கு எதிராக நான் நிறைய விளையாடியுள்ளேன். ஆனால் ஜெய்ஸ்வாலுக்கு எதிராக கொஞ்சம் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளேன். அந்த இருவருமே நல்ல திறமையுடையவர்கள். அவர்கள் இங்கே வரும் போது எப்படி வீழ்த்தலாம் என்ற திட்டங்களை வகுப்பேன்” என்று கூறினார்.

Advertisement