பேட் கம்மின்னஸ் ஐ.பி.எல் தொடரில் வீசப்போகும் ஒரு பந்துக்கு இத்தனை லட்சம் சம்பளமா ? – தலை சுற்ற வைக்கும் கணக்கு

Cummins

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவினால் ஐபிஎல் தொடர் வரும் 2020ஆம் ஆண்டு 13 ஆவது ஐபிஎல் தொடராக நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்த நிலையில் கடந்த 19ஆம் தேதி ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலம் நடைபெற்று முடிந்தது.

Cummins 2

இந்த ஏலத்தில் அனைத்து முன்னணி அணிகளும் தங்கள் அணிக்காக வீரர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். அதில் இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு 15.50 கோடி ரூபாய்க்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னணி வீரரான பேட் கம்மின்ஸ் ஏலம் போனார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை 15.50 கோடி ரூபாய் பணம் கொடுத்து ஏலத்தில் வாங்கியது.

இதனால் இந்த ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை கம்மின்ஸ் படைத்தார். அதுமட்டுமின்றி இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் அவர் வீசப்போகும் ஒவ்வொரு பந்துக்கும் உண்டான சராசரி வருமானம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கணக்கைப் பார்க்கும் போது சற்றே நம்மை தலைசுற்ற வைக்கிறது என்று கூறலாம்.

Cummins 1

ஏனெனில் அவர் இந்த ஐபிஎல் போட்டிகளில் வீசப்போகும் ஒவ்வொரு பந்துக்கும் சராசரியாக இந்திய ரூபாய் மதிப்பில் 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை பெறப்போகிறார். அவருடைய மொத்த மதிப்பு 15.50 கோடி என்பதால் ஒவ்வொரு பந்துக்கும் 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஐபிஎல் தொடர்களில் அதிக விலைக்கு ஏலம் போனவர் என்ற பெருமையும் கம்மின்ஸ் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -