ஆஸ்திரேலிய நட்சத்திர கிரிக்கெட் வீரர் பட் கமின்ஸ் இந்திய ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாத வெளிநாட்டு வீரர்களில் ஒருவராக திகழ்கிறார் என்றே சொல்லலாம். ஏனெனில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணியை அவருடைய தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தோற்கடித்து கோப்பையை வென்றது. அதை விட 2023 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் தொடர்ந்து 10 வெற்றிகளை பெற்ற இந்தியா 2011 போல கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஒரு லட்சம் பேர் அமரக்கூடிய அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் இந்திய ரசிகர்களை அமைதியாக்கி கோப்பையை வெல்வோம் என்று முதல் நாளன்றே பட் கமின்ஸ் எச்சரித்திருந்தார். கடைசியில் சொன்னது போலவே இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா 6வது முறையாக கோப்பையை வெல்ல உதவிய அவர் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்து அமைதியாக்கினார்.
லவ் பண்றேன்:
அந்த வகையில் கடந்த வருடம் நடைபெற்ற 2 ஐசிசி தொடர்களையும் கேப்டனாக வென்ற அவர் வரலாற்றில் தன்னுடைய பெயரை ஆழமாக பொறித்தார். அதன் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற 2024 ஐபிஎல் ஏலத்தில் 20 கோடிக்கு விலை போன முதல் வீரராக சாதனை படைத்த அவர் ஹைதெராபாத் அணிக்காக 22.50 கோடிகளுக்கு வாங்கப்பட்டார்.
இந்நிலையில் பிப்ரவரி 14ஆம் தேதி வழக்கம் போல உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. அதை சிங்கிளாக இருக்கும் இளைஞர்கள் வெறுப்பாகும் அளவுக்கு காதலர்கள் கொண்டாடியது வேறு கதை. அன்றைய தினத்தில் தினேஷ் கார்த்திக் போன்ற நிறைய நட்சத்திர வீரர்கள் தங்களுடைய மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு காதலர் தின வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
அந்த வரிசையில் தன்னுடைய மனைவி பெக்கி போஸ்டனுக்கு பட் கமின்ஸ் தெரிவத்த வாழ்த்து பின்வருமாறு. “சூப்பரான அம்மா, மனைவி, என்னுடைய காதலி. மேலும் சிறப்பாக அலைச்சறுக்கு செய்பவர். காதலர் தின வாழ்த்துக்கள் பெக்கி கமின்ஸ்” என்ற தலைப்புடன் பதவிட்டுள்ளார். ஆனால் அதைப் பார்த்த ஒரு இந்திய ரசிகர் “நான் ஒரு இந்தியன். நான் உங்களையும் தன்னுடைய மனைவியின் காதலிக்கிறேன் ” என்று சேட்டையாக பதிலளித்தார்.
இதையும் படிங்க: இந்த இங்கிலாந்து தொடருக்கு பின்னர் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து நீக்கப்படவும் வாய்ப்பு – விவரம் இதோ
அதற்கு. “இதை நான் என்னுடைய மனைவிக்கு அனுப்பி வைக்கிறேன்” என்று அந்த ரசிகருக்கு பட் கமின்ஸ் அன்பாக பதிலளித்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக அண்டர்-19 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றதற்கும் பட் கமின்ஸ் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.