சர்வதேச கிரிக்கெட்டில் நான் பந்துவீச கஷ்டப்பட்ட பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான் – பேட் கம்மின்ஸ் வெளிப்படை

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் இளம் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான (29 வயது) பேட் கம்மின்ஸ் கடந்த 2011ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்காக அறிமுகமாகி தற்போது வரை 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 164 விக்கட்டுகளையும், 69 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 111 விக்கெட்டுகளையும், 30 டி20 போட்டிகளில் விளையாடி 37 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் இவர் கடந்த சில ஆண்டுகளாகவே உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார்.

- Advertisement -

ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து விளையாடி வரும் கம்மின்ஸ் ஐ சி சி தரவரிசை பட்டியலிலும் முன்னிலையில் இருக்கிறார். இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பேட் கம்மின்ஸ் சமூக வலைதளம் மூலமாக ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார்.

அந்த வகையில் அவரது கிரிக்கெட் வாழ்வில் பந்துவீச சிரமப்பட்ட பேட்ஸ்மேன்கள் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு பதிலளித்த கம்மின்ஸ் கூறுகையில் : இங்கிலாந்தில் ஜோ ரூட், ஸ்டோக்ஸ். இந்தியாவில் புஜாரா, கோலி. நியூசிலாந்தில் வில்லியம்சன், பாகிஸ்தானில் பாபர் அசாம், தென்னாப்பிரிக்காவில் டிவில்லியர்ஸ், டூபிளெஸ்ஸிஸ் ஆகியோருக்கு பந்து வீசுவது சவாலானது என்று தெரிவித்துள்ளார்.

pujara

மேலும் அனைத்து அணிகளிலும் 2 சிறப்பான பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர் அவர்களுக்கு எதிராகவும் பந்து வீசுவது கடினம் என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா போன்ற மைதானங்களில் நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கும் என்றும் அதனால் அங்கு தனக்கு பந்துவீச பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement