2023இல் மிஸ்.. இந்தியா மாதிரி நாங்க அந்த மட்டமான வேலையை செய்யாம நேர்மையா ஜெய்ப்போம்.. கமின்ஸ் பேட்டி

Pat Cummins
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில் எப்படியாவது இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்று முனைப்புடன் ஆஸ்திரேலியா விளையாட உள்ளது. ஏனெனில் கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் முதல் முறையாக வென்று இந்தியா சரித்திரம் படைத்தது.

அந்த வரிசையில் இம்முறை ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெற இந்தியா போராட உள்ளது. மறுபுறம் அதற்கு பதிலடி கொடுத்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனல் போல இந்தியாவை வீழ்த்துவோம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் கமின்ஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

- Advertisement -

மட்டமான வேலை:

இந்நிலையில் இந்தியா தங்களது சொந்த மண்ணில் வெல்ல வேண்டும் என்பதற்காக பெரும்பாலும் சுழலுக்கு சாதகமான பிட்ச்சை அமைப்பதாக கமின்ஸ் தெரிவித்துள்ளார். அதனாலேயே 2023 தொடரில் டெல்லியில் வெற்றியை நெருங்கியும் தங்களால் வெல்ல முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார். அதே போல தாங்கள் நினைத்தால் ஆஸ்திரேலியாவில் பச்சை புற்களுடன் வேகத்துக்கு சாதகமான ஆடுகளத்தை அமைக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இந்தியா போல ஆஸ்திரேலியாவில் தாங்கள் விரும்பும் வகையில் பிட்ச்களை அமைக்கும் மட்டமான வேலையை செய்வதில்லை என்றும் கமின்ஸ் தெரிவித்துள்ளார். மாறாக பேட்டிங், பவுலிங் ஆகியவற்றுக்கு சாதகமான பிட்ச்சை அமைக்கும் உரிமையை மைதான பராமரிப்பாளர்களிடமே விட்டுவிட்டு நேர்மையாக வெல்வோம் கமின்ஸ் என்றும் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

நேர்மையான வழி:

“ஆஸ்திரேலியாவில் பிட்ச்களை அமைக்க எனக்கு வழி இருந்தால் நான் உங்களுக்கு பின்னால் பச்சை புதர்களைப் போல் அது இருக்க நான் விரும்புவேன் (சிரிக்கிறார்). ஆனால் ஆஸ்திரேலியாவில் அது எப்படி இருக்க வேண்டும் என்று நான் எதுவும் சொல்லவில்லை. எனவே அது எப்படி இருக்கும் காத்திருந்து பார்ப்போம். அங்கே யாராவது சதமடித்தால் தனது அணியை வெற்றி பெற வைக்கும் சூழ்நிலை இருந்தது. கடந்த 2 சீசன்களில் இங்கே பிட்ச் அருமையாக இருந்தன”

இதையும் படிங்க: ரிஸ்ட் வேணாம்ன்னு விரும்பும் கம்பீர் இருக்கும் வரை.. 3 ஃபார்மட்லயும் சுந்தருக்கு இது கிடைக்கும்.. ஸ்ரீராம் பேட்டி

“இம்முறையும் பேட் மற்றும் பந்துக்கு இடையே சமநிலை இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் இந்தியாவில் நாங்கள் சென்ற கடைசி சுற்றுப்பயணத்தில் டெல்லியில் வென்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படியொரு பிட்ச் இருந்தால் வெற்றி இரு அணிகளுக்கும் நெருக்கமாகிறது. ஆனால் எங்கள் வீரர்கள் அந்த வகையான பிட்ச்களை குறை சொல்லி நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள்” என்று கூறினார்.

Advertisement