ஆஸ்திரேலியா – இந்தியா கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. அந்தத் தொடரில் 4 போட்டிகளில் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. அதன் காரணமாக 10 வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்ல முடியாமல் இந்தியா நழுவ விட்டுள்ளது.
மேலும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா கிட்டத்தட்ட இழந்துள்ளது. இதை அடுத்து ஐந்தாவது போட்டி ஜனவரி 3ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் வென்று பார்டர் – கவாஸ்கர் கோப்பையையும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்லும் எஞ்சிய வாய்ப்பையும் தக்க வைத்துக் கொள்ள இந்தியா போராட உள்ளது.
சவாலான பும்ரா:
முன்னதாக இந்தத் தொடரில் ஜஸ்ப்ரித் பும்ரா 4 போட்டிகளில் 30* விக்கெட்டுகள் எடுத்து தனி ஒருவனாக ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்து வருகிறார். அவரை எதிர்கொள்ள கிட்டத்தட்ட அனைத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களும் தடுமாறி வருகிறார்கள் என்றே சொல்லலாம். இந்நிலையில் பும்ரா உண்மையாகவே இத்தொடரில் தங்களுக்கு கடினத்தை கொடுத்து வருவதாக ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் பாராட்டியுள்ளார்.
இருப்பினும் நாளின் பிற்பகுதியில் பந்து வீசி பும்ரா களைப்பாக இருப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார். அது போன்ற சமயங்களில் பும்ராவை தாமே நன்றாக அடித்து ரன்கள் குவிக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பும்ரா தற்சமயத்தில் நன்றாக பவுலிங் செய்கிறார். அவரை எதிர்கொள்வது எப்போதும் கடினமாக இருக்கும்”
ஈஸியா அடிப்பேன்:
“இருப்பினும் நான் பேட்டிங் செய்யும் வரும் நேரங்களில் நாளின் பிற்பகுதியில் அவர் கொஞ்சம் சுமாராக பவுலிங் செய்வார் என்று நம்புகிறேன். அது போன்ற நேரங்களில் அவரை எதிர்கொள்வது எனக்கு எளிதாக இருக்கும். தற்சமயத்தில் அவர் நன்றாக பந்து வீசுகிறார். தற்போது அவரை உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு ஃபார்மட்டில் கொஞ்சம் எதிர்கொண்ட அனுபவத்தைப் பெற்றுள்ளேன்”
இதையும் படிங்க: வேறு எந்த இந்திய கேப்டனும் படைக்காத மோசமான சாதனைக்கு சொந்தமாகும் ரோஹித்? ரசிகர்கள் ஏமாற்றம்
“அவர் எப்போதும் சவாலை கொடுப்பார். கடந்த போட்டியில் அவர் பந்து வீசிய போது நான் எதிர்ப்புறம் இருந்தது கொஞ்சம் உதவியது” எனக் கூறினார். இந்த நிலையில் கடைசி போட்டியில் ரோஹித் சர்மா விலக உள்ளதாக தகவல்கள் காணப்படுகின்றன. அவருக்கு பதிலாக பும்ரா கேப்டனாக விளையாடினால் ஆஸ்திரேலியாவுக்கு இரு மடங்கு சவாலை கொடுப்பார் என்று நம்பலாம்.



