யூ.ஏ.இ யில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் பேட் கம்மின்ஸ் விளையாட மாட்டார் – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

Cummins
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடரானது வீரர்கள் இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் எப்போது மீண்டும் ஐபிஎல் துவங்கும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் நேற்று மே 29ஆம் தேதி நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியானது.

IPL

அதன்படி எஞ்சியுள்ள போட்டிகள் செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்து அக்டோபர் பாதிக்குள் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான அட்டவணையை பிசிசிஐ தற்போது தயார் செய்து செய்வதில் மும்முரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் ஏற்கனவே இங்கிலாந்து வீரர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் இந்த ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது கொல்கத்தா அணி பின்னடைவை சந்தித்து உள்ளது என்றே கூறலாம். ஏனெனில் மோர்கன் இல்லாததால் கம்மின்ஸ்க்கு கேப்டன் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கம்மின்ஸ் இந்த ஐ.பி.எல் தொடரில் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

cummins 1

அதன்படி இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னர் ஆஸ்திரேலிய அணி நிறைய போட்டிகளில் விளையாட உள்ளது. ஜூன் மாதம் வெஸ்ட்இண்டீஸ் பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி அதன்பின்னர் ஆப்கானிஸ்தான் அணியையும் டெஸ்ட் தொடரில் சந்திக்கிறது. அதற்கடுத்து ஆகஸ்ட் மாதம் பங்களாதேஷ் நாட்டில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்க உள்ளது இதன் காரணமாக அந்த தொடரில் பேட் கம்மின்ஸ் விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

cummins 1

இதன் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் நிச்சயம் கம்மின்ஸ் விளையாடமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடர் நடைபெறும் போது கரீபியன் லீக் போட்டிகள் நடைபெறுவதால் நிறைய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வரமாட்டார்கள் என்பதனால் பிசிசிஐ மேற்கிந்திய நிர்வாகத்திடம் கோரிக்கை ஒன்றினை வைத்து போட்டிகளை முன்கூட்டியே முடித்துக்கொள்ள கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement