15 கோடி குடுத்து எடுத்த வீரர் மும்பைக்கு எதிரா எப்படி வீசினார் தெரியுமா ? – ரொம்ப மோசம்ங்க அவர்

Cummins
- Advertisement -

ஐபிஎல் தொடரின் ஐந்தாவது லீக் போட்டி இன்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்னை அணியுடன் அடைந்த தோல்விக்குப் பிறகு இரண்டாவது போட்டியாகவும், கொல்கத்தா அணிக்கு முதலாவது போட்டி ஆகும் அமைந்துள்ளது.

kkrvsmi

இந்த போட்டியில் டாஸ் வென்ற தினேஷ் கார்த்திக் முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை குவித்தது. துவக்க வீரர்களான ரோகித் சர்மா 54 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரி என 80 ரன்கள் விளாசினார். சூர்யகுமார் யாதவ் 47 ரன்கள் 28 பந்துகளில் விளாசினார்.

- Advertisement -

கொல்கத்தா அணி சார்பாக இளம் வீரர் சிவம் மாவி 4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் தற்போது 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாட உள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி சார்பாக 15 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு வாங்கப்பட்ட பேட் கம்மின்ஸ் எவ்வாறு விளையாடுவார் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

cummins

ஆனால் அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக இன்று மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். 3 ஓவர்கள் வீசி அவர் விக்கெட் எதுவும் இன்றி 49 ரன்களை விட்டுக் கொடுத்தார். இன்னும் ஒரு ஓவர் வீசி இருந்தால் அவர் 50 ரன்களை கடந்து மோசமாக ரன்களை வாரி வழங்கி இருப்பார் என்பது மட்டும் உறுதி.

rohith 1

மேலும் 15 கோடி கொடுத்து எடுத்ததற்கு சிறப்பான செயலை செய்துள்ளதாக ரசிகர்கள் அவரை இணையத்தில் கிண்டல் செய்து வருகின்றனர். மேலும் ஒரு ஓவர் மீதம் இருந்தும் அவருக்கு பந்துவீச கொடுக்காமல் அவருக்கு பதிலாக ரசலை இறுதி நேரங்களில் தினேஷ் கார்த்திக் உபயோகித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement