ஐசிசி உலக கோப்பை 2023 : 6வது கோப்பை வெல்லுமா.. பட் கமின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியின் முழுமையான அலசல்

Australian Team 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் துவங்கி நவம்பர் 19 வரை நடைபெற உள்ளது. அதில் சொந்த மண்ணில் கில்லியாகவும் கோப்பையை வெல்லும் அணியாகவும் கருதப்படும் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் முதன்மையான வெளிநாட்டு அணி என்றால் அது ஆஸ்திரேலியாவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் கடந்த 1987 உலகக் கோப்பையை முதல் முறையாக ஆலன் பார்டர் தலைமையில் இந்திய மண்ணில் முதல் முறையாக ஆஸ்திரேலியா வென்றது.

அதன் பின் 1999, 2003, 2007, 2015 ஆகிய வருடங்களில் ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க் ஆகியோரது தலைமையில் மொத்தம் 5 கோப்பைகளை வென்று உலக கிரிக்கெட்டின் முடிசூடா அரசனாக திகழ்ந்து வருகிறது. மேலும் தோல்வியின் விளிம்புக்கு சென்றாலும் மனம் தளராமல் போராடி வெற்றி காணும் குணத்தை இயற்கையாகவே கொண்ட ஆஸ்திரேலியர்களுக்கு ஐசிசி தொடர்களில் எப்படி அசத்த வேண்டும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணி:
அந்த நிலையில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் ஆஷஸ் கோப்பையை கேப்டனாக வென்ற பட் கமின்ஸ் அணியையும் வேகப்பந்து வீச்சு துறையும் தலைமை தாங்குகிறார். அவருடன் கடந்த 2 50 ஓவர் உலகக் கோப்பைகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலராக சாதனை படைத்த மிட்சேல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வுட், நாதன் எலிஸ், சீன் அபௌட் ஆகியோரால் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு துறை இந்திய மண்ணில் மிரட்டும் அளவுக்கு உலகத்தரம் வாய்ந்ததாகவே இருக்கிறது.

அவர்களை விட மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்சேல் மார்ஷ், கேமரூன் க்ரீன் ஆகிய 3 உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் பவுலிங் மற்றும் பேட்டிங் துறையை கவனித்துக் கொள்ளும் திறமைமிக்க ஆல் ரவுண்டர்களாக ஆஸ்திரேலிய அணிக்கு பலம் சேர்க்கின்றனர். சொல்லப்போனால் உலகின் எதிரணிகளை காட்டிலும் இப்படி 3 வேகப்பந்து ஆல் ரவுண்டர்கள் இருப்பது ஆஸ்திரேலியாவின் தனித்துவமான பலமாகும்.

- Advertisement -

இந்த இருவருமே அதிரடியாக பேட்டிங் செய்யக் கூடியவர்கள் என்ற நிலைமையில் கிளன் மேக்ஸ்வேல் சரவெடியாக பேட்டிங் செய்யும் திறமையுடன் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக ஆஸ்திரேலிய அணியை மேலும் வலுப்படுத்துகிறார். அதே போல அனுபவம் மிகுந்த ஆடம் ஜாம்பாவுடன் எதிரணிக்கு ஆச்சரியத்தை கொடுப்பதற்காகவே இளம் வீரர் தன்வீர் சங்கா தேர்வாகியுள்ளார்.

அவர்களுடன் அஸ்டன் அகர் ஆல் ரவுண்டராக இருப்பதால் கிளன் மேக்ஸ்வேஸை சேர்த்து ஆஸ்திரேலிய அணியின் சுழல் பந்து வீச்சு துறையும் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் அளவுக்கு வலுவாகவே இருக்கிறது. இவர்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல் பேட்டிங் வரிசையில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் ஆகியோர் டாப் ஆர்டரில் எதிரணி பவுலர்களை அடித்து நொறுக்கும் அளவுக்கு அதிரடியாக விளையாடும் திறமை கொண்டவர்களாக இருக்கின்றனர். மேலும் விக்கெட் கீப்பராக அலெக்ஸ் கேரி மிடில் ஆர்டரை பார்த்துக் கொள்வதற்காக தயாராக இருக்கிறார்.

இதையும் படிங்க: ருதுராஜ்க்கு பதிலா.. ஏசியன் கேம்ஸ் தொடரில் பாவமான அவருக்கு கேப்டனா சான்ஸ் கொடுத்துருக்கலாம்.. ஆகாஷ் சோப்ரா ஆதங்க கருத்து

இருப்பினும் இந்த அணியில் கமின்ஸ், மேக்ஸ்வேல், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், கேப்டன் பட் கமின்ஸ் ஆகியோர் காயத்தை சந்தித்திருப்பது பின்னடைவாக இருக்கிறது. ஆனால் அவர்கள் தற்போது குணமடைந்து இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளனர். எனவே அத்தொடரில் அவர்கள் களமிறங்குவார்கள் என்பதால் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவத்துடன் இந்திய மண்ணில் நடைபெறும் 2023 உலக கோப்பையை வெல்வதற்கு ஆஸ்திரேலியா தகுதியான அணியாக இருக்கிறது என்பதே க்ரிக்தமிழ் இணையத்தின் அலசலாகும்.

Advertisement