வருண் சக்ரவர்த்தியுடன் தொடர்பில் இருந்ததால் தனிமை படுத்திகொண்ட மற்றொரு முன்னணி வீரர் – என்ன ஆகப்போகுதோ ?

Cummins

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற இருந்த 30வது லீக் போட்டி கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோருக்கு ஏற்பட்ட கரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்னர் இன்று காலை கொல்கத்தா அணியில் இடம் பெற்று இருக்கும் வீரரான வருண் சக்கரவர்த்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இன்றைய போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

sandeep

வருண் சக்ரவர்த்தியை தொடர்ந்து மேலும் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருக்க வாய்ப்பு இருக்கும் என்ற காரணத்திற்காக கொல்கத்தா அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கு தற்போது மீண்டும் பரிசோதனையை நடத்தி உள்ளனர். பயோ பபுளில் பாதுகாப்பாக இருந்தும் கொல்கத்தா வீரர்களுக்கு ஒருவரின் பின் ஒருவருக்காக இன்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனால் பயிற்சி ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு வீரர்களுக்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அணியில் உள்ள இரண்டு வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் தற்போது கொல்கத்தா அணியில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

cummins 1

அவருக்கு அறிகுறிகள் மற்றும் கோரோனா தாக்கம் ஏதும் இல்லாத நிலையிலும் தான் அவர்களுடன் தொடர்பில் இருந்த காரணத்திற்காக தற்போது பேட் கம்மின்ஸ் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ஒருவேளை அவருக்கும் கொரோனா உறுதியானால் இன்னும் பலருக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக இந்தத் தொடரில் மீதமுள்ள போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

cummins 1

அதுமட்டுமின்றி ஏற்கனவே டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வருன் சக்ரவர்த்தி விளையாடி உள்ளதால் இன்னும் தொற்று எத்தனை பேருக்கு பரவி இருக்கும் என்பதை உறுதியாகக் கூறமுடியாத நிலையில் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.