ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது. அந்த வெற்றியுடன் விடைபெற்ற ராகுல் டிராவிட்டுக்கு பதிலாக கௌதம் கம்பீர் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு வரும் நவம்பர் மாதம் துவங்கும் 2024/25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தான் முதல் சவால் என்றே சொல்லலாம்.
ஏனெனில் பொதுவாகவே ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினமாகும். ஆனால் அதை விராட் கோலி மற்றும் ரஹானே தலைமையில் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த தொடர்களில் இந்தியா செய்து காட்டியது. அதனால் ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களை வென்ற முதல் ஆசிய அணி என்ற வரலாற்றையும் இந்தியா படைத்தது.
ரெடியா இருக்கேன்:
எனவே இம்முறையும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலிய மண்ணில் ரோஹித் சர்மா மற்றும் கௌதம் கம்பீர் தலைமையில் இந்தியா தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் அடுத்ததாக நடைபெறும் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான வெள்ளைப்பந்து தொடர்களை தவிர்த்து விட்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக தயாராகி வருவதாக கேப்டன் பட் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியாவை இம்முறை தமது தலைமையில் தோற்கடிப்பதற்கு தயாராகி வருவதாக கமின்ஸ் மறைமுக சவால் விடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அந்த சாளரம் (இங்கிலாந்து, ஸ்காட்லாந்து தொடர்கள்) என் உடலுக்கு ஓய்வு கொடுப்பதற்கும் முழு சீசனுக்கு முந்தைய காலத்தை நெருங்குவதற்கும் ஒரு நேரமாக ஒதுக்கப்பட்டுள்ளது”
“அதற்காக 6 – 8 வாரங்கள் ஓய்வு பெற்று மீண்டும் பில்டப் செய்ய வேண்டும். மேஜர் லீக் வாய்ப்பு வந்ததும் நாங்கள் திட்டத்தை வரைந்தோம். அது பெரிதாக மாறவில்லை. அது முடிந்ததும் வீட்டுக்குச் சென்று 6 முதல் 8 வாரங்கள் ஓய்வெடுக்க உள்ள நான் அதன் பின் தினமும் ஜிம்முக்கு சென்று உடலை வலிமையேற்றுவேன். அதன் பின் எங்கள் கோடைகாலத்தில் இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரிய டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது”
இதையும் படிங்க: கொல்கத்தா கிடையாது.. 9 வருட கம்பேக்.. ராகுல் டிராவிட் பயிற்சியாளராகப் போகும் ஐபிஎல் அணி.. பற்றிய தகவல்
“அதில் தான் கவனம் இருக்கிறது” என்று கூறினார். முன்னதாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அவருடைய தலைமையில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. அதன் பின் 2023 உலகக்கோப்பை ஃபைனலிலும் இந்தியாவை சொந்த மண்ணில் தோற்கடித்து ஆஸ்திரேலியா கோப்பை வென்றது. அப்படி வெளிநாடுகளில் வென்ற தாம் தற்போது தங்களது சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்த தயாராகி வருவதாக பட் கமின்ஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.