தோனிக்கு எதிராக இந்த ஒரு பந்தினை மட்டும் வீசவே மாட்டேன் – பேட் கம்ம்மின்ஸ் பேட்டி

Cummins
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறந்த பௌலராக விளங்கும் ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ், இந்திய அணியின் வீரரான மகேந்திர சிங் தோணிக்கு எதிராக ஆட்டத்தின் கடைசி கட்ட ஓவர்களை வீச நான் விரும்ப மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவிற்கு திரும்பியுள்ள அவர், தற்போது யூ டியூப் சேனல் ஒன்றில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருவதில் மும்மரமாக இருந்து வருகிறார்.

இதற்கிடையில் தற்போது அந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் அவரிடம் ஒரு பந்துக்கு ஆறு ரன்கள் அடிக்க வேண்டிய சூழ்நிலையில் மகேந்திர சிங் தோணிக்கு எதிராக நீங்கள் எந்த மாதிரியான பந்தை வீசுவீர்கள்? என்ற கேள்வியைக் கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த கம்மின்ஸ்,
கடைசி கட்ட ஓவர்களில் பல பந்து வீச்சாளர்கள் தோணிக்கு எதிராக யார்க்கர் பந்துகளை வீச நினைப்பார்கள்.

- Advertisement -

பந்து வீச்சாளர்கள் அதை தவறவிடும்போது அந்த பந்துகளை தோணி சிக்ஸருக்கு பறக்கவிட்ட பல வீடியோக்களை நான் பார்த்திருக்கிறேன். அதனால் அவருக்கு எதிராக நான் யார்க்கர் பந்தை வீச நினைக்க மாட்டேன். ஒரு ஸ்லோவர் பந்தையோ அல்லுது பௌன்சர் பந்தையோ தான் வீச நினைப்பேன் என்று கூறினார்.

Cummins

மேலும் பேசிய அவர், தோணிக்கு எதிராக கடைசி கட்ட ஓவர்களில் நான் பந்து வீசவே விரும்ப மாட்டேன் என்றும் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் பேசிய அவர் : இந்த ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்ட போது நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். ஆனால் மீண்டும் நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் நாங்கள் வலுவான அணியாக மீண்டு வருவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

Cummins 1

ஐபிஎல் தொடர்களில் பேட் கம்மின்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். பாதியில் நிறுத்தப்பட்டுள்ள இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரானது, செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் ஐக்கிய அமீரகத்தீல் தொடங்கும் என பிசிசிஐ வட்டாரம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement