பாலியல் புகார் : டிம் பெயின் பதவி விலகியதை தொடர்ந்து புதிய கேப்டனாக பதவியேற்கும் – வீரர் இவர்தானாம்

Paine

ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டனான டிம் பெயின் சக பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் ரீதியான குறுந்தகவல்களை அனுப்பியதன் விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் அவர் தானாக முன்வந்து தனது கேப்டன் பதவியை துறந்துள்ளார். மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட டிம் பெயின் : ஆஷஸ் தொடருக்கு முன்பு எந்தவித சர்ச்சையும் ஏற்படுத்த விரும்பவில்லை என்றும் தன்னால் யாரேனும் காயமடைந்து இருந்தால் அதற்கு என்னை மன்னித்து விடுங்கள் என்றும் அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

paine 2

தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டது மட்டுமின்றி கேப்டன் பதவியையும் அவர் ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் டிசம்பர் 5-ஆம் தேதி ஆஷஸ் தொடர் பிரிஸ்பேனில் துவங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியும், புதிய கேப்டனும் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட இருக்கிறது.

- Advertisement -

அப்படி புதிய டெஸ்ட் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்கள் ? என்று அனைவரும் எதிர்பார்த்து வரும் வேளையில் ஏற்கனவே கேப்டனாக இருந்த ஸ்மித் மற்றும் அணியின் சீனியர் வீரரான வார்னரும் இந்த தொடரில் கேப்டனாக செயல்பட மாட்டார்கள் என்றும் இளம் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை ஏற்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனாக செயல்பட்டுள்ள கம்மின்ஸ் நிச்சயம் ஆஸ்திரேலிய அணியை தலைமை தாங்க தகுதியான நபர் தான் என்கிற காரணத்தினால் அவருக்கு கேப்டன் பதவி அளிக்கப்படும் என்றும் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement