சேமிச்சு வெச்சிருக்கோம்.. ஐபிஎல் 2024 ஃபைனலுக்கு முன் மெரினாவில் சவால் விட்டுக்கொண்ட ஸ்ரேயாஸ் – கமின்ஸ்

KKR vs SRH 4
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டி மே 26 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெறும் அப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளை பொறுத்த வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கௌதம் கம்பீர் வழிகாட்டுதலுடன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அபாரமாக விளையாடி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.

அதே வேகத்தில் குவாலிபயர் 1 போட்டியில் ஹைதராபாத்தை வீழ்த்தி ஃபைனலுக்கு வந்த கொல்கத்தா அணியில் ரிங்கு சிங், ரசல், சுனில் நரேன் போன்ற மேட்ச் வின்னர்கள் நிறைந்திருக்கின்றனர். மறுபுறம் கடந்த வருடம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடிய ஹைதராபாத் இம்முறை 2023 உலகக் கோப்பை வென்ற பட் கமின்ஸ் தலைமையில் போராடி ஃபைனலுக்கு வந்துள்ளது.

- Advertisement -

கேப்டன்களின் சவால்:
இருப்பினும் இந்த வருடம் 287 ரன்கள் விளாசி, 5 ஓவரில் 100 ரன்கள் குவித்து, 9.2 ஓவரில் 166 ரன்களை சேசிங் செய்து எதிரணிகளை தெறிக்க விட்ட அந்த அணி சாதனை வெற்றிகளை பெற்றது. அதனால் கொல்கத்தாவை விட ஹைதராபாத் ஆபத்தான அணியாக இருக்கிறது என்றே சொல்லலாம். இந்நிலையில் ஃபைனலுக்கு முன்பாக இரு அணி கேப்டன்களின் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு சென்னையின் புகழ்பெற்ற மெரினா கடற்கரையில் நடைபெற்றது.

அந்த நிகழ்வின் முடிவில் இரு அணி கேப்டன்களும் ஒருவருக்கொருவர் அடிப்படை சவால்களை விட்டுக் கொண்டனர். அதில் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியது பின்வருமாறு. “அன்பான பட், இன்று உங்களுக்கு ஒரு குறிப்பை வழங்குவது வேடிக்கையாக இருக்கும் என்று நினைக்கிறேன். முதலில் நீங்கள் ஹைதெராபாத் அணியை இந்த வருடம் நீங்கள் அற்புதமாக வழி நடத்தினீர்கள். ஆனால் இதே சீசனில் உங்களுக்கு நாங்கள் கடினமான நேரத்தை கொடுத்தும்”

- Advertisement -

“இந்த நேரத்தில் இதே எதிரணியை நீங்கள் வேறு மைதானத்தில் (குவாலிபயர் 1இல்) எதிர்கொண்டீர்கள் என்பதை நினைவுபடுத்துகிறேன். ஆனால் இன்று நீங்கள் அதே ஊதா மற்றும் தங்கம் கலந்த அணியை த்ரில்லான ஃபைனலில் எதிர்கொள்கிறீர்கள். அதில் சிறந்த அணி வெல்லும். அதாவது எங்களுடைய சிறந்த அணி வெல்லும்” என்று கூறினார். அவருக்கு பட் கமின்ஸ் பதிலளித்தது பின்வருமாறு. “சிறிய குறிப்புக்கு நன்றி. உண்மையாக நீங்களும் உங்கள் அணிக்கு முன்மாதிரியாக இருக்கிறீர்கள்”

இதையும் படிங்க: ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக். அடுத்ததா என்ன பண்ணப்போறாரு தெரியுமா?

“ஆனால் அதற்காக உதவ முடியாது. இதே மைதானத்தில் (குவாலிபயர் 2இல்) பெற்ற வெற்றியைப் பற்றி சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. கொல்கத்தா வீரர்கள் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று தெரியும் என நம்புகிறேன். ஞாயிற்றுக்கிழமை வாருங்கள். இந்த வருடம் நீங்கள் எங்களுக்கு கடினமான நேரத்தை கொடுத்தீர்கள். ஆனால் திருப்பி அடிக்க ஹைதராபாத்தின் ஆரஞ்சு இராணுவம் கடைசியாக சிறந்ததை சேமித்துள்ளது என்பதை நான் உறுதியளிக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement