ஓய்வை அறிவித்த இந்திய வீரர் அஷ்வினுக்கு மறக்கமுடியாத நினைவுப்பரிசை வழங்கி கவுரவித்த – பேட் கம்மின்ஸ்

Cummins-and-Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி துவங்கி இன்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியின் பெரும்பாலான நேரம் மழையால் பாதிக்கப்பட்டது. ஐந்து நாட்களில் இந்த போட்டி மழையால் கிட்டத்தட்ட 10 முறை தடைபட்டது.

அஷ்வினுக்கு ஆஸி கொடுத்த நினைவு பரிசு :

இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிவடைந்தது. இந்த போட்டி முடிவடைந்ததும் தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு அறிவித்தார்.

- Advertisement -

அனுபவ வீரரான அஸ்வின் இப்படி திடீரென ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது ஓய்வை அறிவித்தது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது இந்த ஓய்வு அறிவிப்பிற்கு பலரது மத்தியிலும் இருந்து பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

இந்நிலையில் ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஷ்வினை கௌரவப்படுத்தும் விதமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லயன் ஆகியோர் இணைந்து இந்த தொடரில் விளையாடிய ஆஸ்திரேலியா வீரர்கள் அனைவரும் கையொப்பமிட்ட ஆஸ்திரேலிய ஜெர்சி ஒன்றினை அஷ்வினுக்கு நினைவு பரிசாக வழங்கி கௌரவித்துள்ளனர்.

- Advertisement -

இன்னும் இரண்டு ஆட்டங்கள் எஞ்சியுள்ள வேளையில் திடீரென அஸ்வின் இந்த ஓய்வு முடிவை அறிவித்தது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் இன்னும் தன்னிடம் விளையாடும் அளவிற்கு தகுதி உள்ளது என்றும் அதன் காரணமாக ஐ.பி.எல் மற்றும் கிளப் போட்டிகளில் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஆல் டைம் கிரேட் அஸ்வினுக்கு.. கும்ப்ளே, கம்பீர், யுவி, சேவாக், ரெய்னா உள்ளிட்ட நட்சத்திரங்கள் பொழிந்த வாழ்த்து மழை

அண்மையில் நடைபெற்று முடிந்த 2025 ஐ.பி.எல் ஏலத்தில் ரவிச்சந்திரன் அஷ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது அவரை 7 கோடிக்கு மேல் ஏலத்தில் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement