இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 38 வயதில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ள வாழ்த்து பின்வருமாறு. “ஒரு இளம் வீரராக இருந்து நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக வளர்ந்தது வரை உங்களுடைய வளர்ச்சியை பார்த்ததில் கௌரவம். அடுத்த தலைமுறை பவுலர்கள் நாங்கள் அஸ்வின் காரணமாக பவுலராக வந்தோம் என்று சொல்வார்கள் என்பதை நான் அறிவேன். உங்களை மிஸ் செய்வோம் பிரதர்” என்று கூறியுள்ளார்.
முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. “ஹேய் ஆஸ். உங்களுடைய அற்புதமான கேரியருக்கு வாழ்த்துக்கள். நான் பயிற்சியாளராக இருந்த போது நீங்கள் இந்திய அணிக்கு மதிப்புமிக்க சொத்தாக இருந்தீர்கள் கடவுள் உங்களை ஆசிர்வாதிக்கட்டும்” என்று கூறியுள்ளார். முன்னாள் வீரர் யுவராஜ் சிங். “நன்றாக விளையாடினீர்கள் அஸ்வின். ஜாம்பவானாக பயணித்ததற்கு வாழ்த்துக்கள்”
வாழ்த்து மழை:
“உலகின் சிறந்தவராக பந்தை சுழற்றியது முதல் கடினமான நேரங்களில் உயர்ந்து நின்றது வரை நீங்கள் இந்திய அணிக்கு உண்மையான சொத்தாக இருந்தீர்கள். வாழ்வின் மற்றொரு பகுதிக்கு உங்களை வரவேற்கிறேன்” என்று பாராட்டியுள்ளார். சுரேஷ் ரெய்னா. “பந்து வீச்சில் உங்களின் மேஜிக், கிரிக்கெட்டின் கூர்மையான அறிவு, டெஸ்ட் கிரிக்கெட்டின் மீதான ஆர்வம் போன்றவை எங்களுடைய இதயத்தில் எப்போதும் இருக்கும். எண்ணற்ற நினைவுகள் மற்றும் பெருமையை கொடுத்ததற்கு நன்றி. உங்களின் அடுத்த அத்தியாயத்திற்கு வாழ்த்துக்கள்” என்று அஷ்வினை பாராட்டியுள்ளார்.
தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். “ஒரு கோட் ஓய்வு பெற்றுள்ளது. அற்புதமான கேரியரில் சிறப்பாக விளையாடினீர்கள். உங்களுடன் விளையாடியதற்கு பெருமையடைகிறேன். நீங்கள் தமிழ்நாட்டிலிருந்து இந்தியாவுக்காக விளையாடிய ஒரு மகத்தானவர். அஸ்வின் உங்களுக்கு என்னுடைய அன்பு. அடுத்ததாக குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்” என்று பாராட்டியுள்ளார்.
தமிழ்நாட்டின் ஜாம்பவான்:
வாசிம் ஜாபர். “அவர் மேட்ச் வின்னர் மட்டும் கிடையாது. சீரியஸ் வின்னர். அற்புதமான கேரியருக்கு வாழ்த்துக்கள் அஸ்வின். நீங்கள் இந்த விளையாட்டின் ஒரு மகத்தானவராக செல்வீர்கள். வெகு தூரம் செல்லாதீர்கள். இந்த விளையாட்டு எப்போதும் உங்களுடன் இருக்கும். 537 டெஸ்ட் விக்கெட்டுகளை 24.01 சராசரியில் எடுத்துள்ள சாம்பியன்” என்று பாராட்டியுள்ளார்.
ஜாம்பவான் அனில் கும்ப்ளே. “உங்களுடைய பயணம் அசாதாரணமானது அல்ல அஸ்வின். 700க்கும் மேற்பட்ட சர்வதேச விக்கெட்டுகளை எடுத்து நீங்கள் களத்தை அலங்கரித்த சிறந்தவர்களில் ஒருவர். நட்சத்திர வாழ்க்கைக்கும் பிரகாசமான எதிர்காலத்திற்கும் வாழ்த்துக்கள்” என்று பாராட்டியுள்ளார். விரேந்தர் சேவாக். “அபாரமான கேரியருக்கு வாழ்த்துக்கள் அஸ்வின். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக இரண்டாவது அதிக விக்கெட் எடுத்த நீங்கள் நல்ல மேட்ச் வின்னர்” என்று பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க: ஆச்சர்ய மரியாதை இருக்கு.. உலகில் இப்படி பலர் இல்ல.. ஆல் டைம் கிரேட் அஸ்வினை வாழ்த்திய கமின்ஸ்
ஹர்பஜன் சிங். “சிறப்பான கேரியருக்கு வாழ்த்துக்கள் அஸ்வின். டெஸ்ட் வீரராக உங்களுடைய லட்சியம் பாராட்டத்தக்கது. இந்திய சுழல் பந்து வீச்சில் 10 வருடங்களுக்கு மேல் கொடிக்கட்டி பறந்தது நல்லது. உங்கள் சாதனைகளைப் பற்றி மிகவும் பெருமைப்படுங்கள். இனிமேல் உங்களை அடிக்கடி சந்திப்பேன் என்று நம்புகிறேன்” என பாராட்டியுள்ளார்.



