இந்த ஐபிஎல்-இல் காயம் காரணமாக விளையாடாத சிறந்த வீரர்கள் .

- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11வது சீசன் ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.7ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்கப்படவுள்ள ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.

Ravinder

- Advertisement -

ஏலத்தில் எடுக்கப்பட்டும் காயம் காரணமாக இந்த ஐபிஎல்-இல் ஆடமுடியாமல் போகப்போகும்
ஐந்து வீரர்கள் இவர்கள் தான்.

1. ஷாகிப் ஹல் ஹசேன்

இந்தாண்டு ஐபிஎல்-இல் ஐதரபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட இவர் கடந்த 2011ம் ஆண்டுமுதல் கொல்கத்தா அணிக்காக விளையாடியவர்.இந்தாண்டு ஜனவரியில் நடந்த முத்தரப்பு கிரிக்கெட்டில் இறுதிப்போட்டியின் போது இடதுகை விரலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக அவதிப்பட்டு வருகின்றார்.

- Advertisement -

வங்கதேச அணியின் கேப்டனான இவர் மிகச்சிறந்த ஆல்ரவுண்டரும் கூட. ஐதரபாத் சன்ரைசர்ஸ் ஆணிக்காக இந்தாண்டு 2கோடி ரூபாய்க்கு ஏலத்தில்எடுக்கப்பட்டார்.இடதுகையில் ஏற்பட்டுள்ள காயம் இன்னும் குணமாகாத நிலையில் ஓய்வெடுத்து வரும் இவர் தற்போது இலங்கையில் நடைபெற்றுவரும் நிடாஸ்கோப்பையிலிருந்து விலகியுள்ளார்.எனவே இந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது சந்தேகமே.

sakib

2. ஜோப்ரா ஆர்ச்சர்.

- Advertisement -

22வயதான இளம்வீரரான இவரை இந்தாண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் ரூபாய் 7.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

பிக்பாஷ் சீசனில் மிகச்சிறப்பாக விளையாடிய இவர் தற்போது பாகிஸ்தானில் நடந்துவரும் பி.எஸ்.எல் போட்டிகளிலும் அசத்தினார்.பாகிஸ்தான் லீக்கில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அவர் ஐபிஎல்-இல் விளையாடுவது கேள்விக்குறியே.

- Advertisement -

archer

3. ஆண்ட்ரூ ரஸ்ஸல்.

ஒரு வருட தடைக்கு பின்னர் சமீபத்தில் தான் பாகிஸ்தான் லீக்கில் விளையாட திரும்பினார்.ஆனால் பாகிஸ்தான் லீக்கில் இவருக்கும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.காயம் இன்னும் சரியாகாததால் கொல்கத்தா அணிக்காக இவரும் ஆட வாய்ப்பில்லையாம்.

arnold

4. கிரிஸ் லைய்ன்.

ஏற்கனவே ஆண்ட்ரு ரஸ்ஸல் காயத்தின் காரணமாக கொல்கத்தா அணிக்காக விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் அதே அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள மற்றொரு வீரரான கிரிஸ் லைய்னும் தனக்கு ஏற்பட்ட தொடர்ச்சியான தோள்பட்டை காயங்களால் தவித்து வருவதால் இவருமே கொல்கத்தா அணிக்காக விளையாடுவது சந்தேகமே.

lynn

5. ரவீந்திர ஜடேஜா.

இந்திய அணியை சேர்ந்த ரவீந்திர ஜடேஜா சென்னை அணிக்காக விளையாடி வருபவர். ஐபிஎல் ஏலத்தின் போது ரெய்னா மற்றும் தோனியுடன் தக்கவைக்கப்பட்டவர்.

விஜய் ஹசாரே கோப்பையின் போது ஏற்பட்ட காயத்தின் காரணமாக இந்த ஐபிஎல்-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் தான் விரைவில் குணமடைந்து அணிக்கு திரும்புவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.காயம் காரணமாக அவதிப்படும் அனைத்து வீரர்களும் விரைவில் குணமடைந்து ஐபிஎல்-இல் கலக்க வாழ்த்துகள்

jadeja

Advertisement