ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் ரோஹித்துடன் ஓப்பனராக அவர்தான் விளையாடனும் – பார்த்திவ் படேல் கருத்து

parthiv
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற முடிந்த ஆசியக் கோப்பை தொடரில் லீக் சுற்று போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியானது அடுத்ததாக “சூப்பர் 4” சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து அந்த தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாட இந்திய அணி தயாராகி வருகிறது.

Bhuvneswar Kumar INDIA

- Advertisement -

அதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிராக நடைபெற இருக்கும் டி20 தொடர்களிலும் இந்திய அணி சொந்த மண்ணில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இந்திய அணியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும், இந்திய அணியின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் பட்டேல் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கையில் :

Rohith-1

ஆஸ்திரேலிய மைதானங்களில் ரோகித்துடன் துவக்க வீரராக யார் களமிறங்க வேண்டும் என்பது குறித்து பேசியுள்ளார். இது குறித்து கூறுகையில் : ஆஸ்திரேலியா போன்ற வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பெரிய ஆடுகளங்களில் ரோகித் சர்மாவுடன் விராட் கோலி இறங்கினால் தான் அது சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

- Advertisement -

ரோகித் ஒருபுறம் போட்டியை அதிரடியாக ஆரம்பிக்கும் வேளையில் அணியின் எண்ணிக்கையை சீராக கொண்டு செல்ல விராட் கோலியின் ஆட்டம் மிகவும் அவசியம். எனவே என்னை பொறுத்தவரை விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருடன் இந்திய அணி களம் இறங்கினால் நல்ல துவக்கம் கிடைக்கும்.

இதையும் படிங்க : எனக்கு இந்த ஒரு வருத்தம் மட்டும் தான் இருக்கு. ஓய்வை அறிவித்த முன்னாள் சி.எஸ்.கே வீரர் – விவரம் இதோ

அப்படி நல்ல துவக்கம் கிடைக்கும் பட்சத்தில் பின்வரும் வீரர்கள் அதனை அப்படியே கொண்டு சென்று மிகச் சிறப்பாக முடிக்க முடியும். எனவே ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோரே துவக்க வீரர்களாக டி20 உலகக்கோப்பை தொடரில் களமிறங்க வேண்டும் என பார்த்திவ் படேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement