எனக்கு இந்த ஒரு வருத்தம் மட்டும் தான் இருக்கு. ஓய்வை அறிவித்த முன்னாள் சி.எஸ்.கே வீரர் – விவரம் இதோ

Ishwar-Pandey
- Advertisement -

இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு போட்டியிலாவது விளையாடி விட வேண்டும் என்பதே கிரிக்கெட் வீரர்களின் கனவாக இருக்கும். அந்த வகையில் இந்திய அணிக்காக தொடர்ச்சியாக சில வீரர்கள் விளையாடும் வேளையில் உள்ளூர் கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமலும் போய்விடும். அந்த வகையில் பல வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடாமலேயே ஓய்வு அறிவித்த வேளையில் தற்போது 33 வயதான மத்திய பிரதேசத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஈஸ்வர் பாண்டே சர்வதேச மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

Ishwar Pandey 1

- Advertisement -

இந்திய அணிக்காக இவர் விளையாடா விட்டாலும் 75 முதல் தரப் போட்டிகளில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடி 263 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோன்று ஐபிஎல் தொடரில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை விளையாடிய அவர் 25 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் முதலில் புனே சூப்பர் ஜெயட்ன்ஸ் அணிக்காக அறிமுகமான அவர் அதன் பின்னர் சி.எஸ்.கே அணிக்காகவும் விளையாடி இருக்கிறார். இந்நிலையில் தனது ஓய்வு முடிவு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : நான் ஓய்வை அறிவிக்க வேண்டிய நாள் வந்துவிட்டது. கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளேன். சர்வதேச மற்றும் முதல் தர கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்.

Ishwar

என்னுடைய இந்த நம்ப முடியாத பயணத்தை நான் 2007 ஆம் ஆண்டு துவங்கினேன். இன்று வரை களத்திலும், வெளியிலும் நான் செலவழித்த ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து வருகிறேன். என் வாழ்க்கையில் நான் கொஞ்சம் சாதித்ததை எண்ணி பெருமையாகவும், ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் நினைக்கிறேன். எனது நாட்டிற்காக என்னால் ஒரு ஆட்டத்தில் கூட விளையாட முடியவில்லை என்பதே என்னுடைய ஒரே வருத்தமாக உள்ளது.

- Advertisement -

மற்றபடி நான் எப்போதும் ஒரு அன் கேப்ட்டு இந்திய கிரிக்கெட் வீரர் என்று அறியப்படுவேன். இருப்பினும் ஐபிஎல் தொடரின் போது விராட் கோலி, தோனி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, இஷாந்த் சர்மா, ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார் போன்ற சிறப்பான வீரர்களுடன் இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே போன்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடியதும் எனது மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது.

இதையும் படிங்க : டி20 தரவரிசை : விராட் கோலியுடன் சேர்த்து தரவரிசையில் முன்னேற்றத்தை கண்ட இந்திய வீரர் – விவரம் இதோ

என்மீது நம்பிக்கை வைத்து என்னை விளையாட வைத்த மத்தியபிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்திற்கும், பிசிசிஐ-க்கும் நன்றி. அதோடு என்னுடன் விளையாடிய வீரர்களுக்கும், என்னுடன் பயணித்த நிர்வாகிகள், ஊழியர்கள் என அனைவருக்கும் நன்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement