டெஸ்ட் போட்டியில் நடராஜனை சேர்க்காததுக்கு இதுமட்டுமே காரணம் – சரியான காரணத்தை சொன்ன முன்னாள் வீரர்

Nattu

கடந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய தங்கராசு நடராஜன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்ததால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய சுற்றுப்பயணத்தில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இடம்பிடித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தங்கராசு நடராஜனுக்கு இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. தனது முதல் சர்வதேச போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார் நடராஜன்.

பிறகு டி20 போட்டியில் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது. இதிலும் சிறப்பாக செயல்பட்ட நடராஜன் பல்வேறு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 4 போட்டியில் விளையாடிய நடராஜன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் நடராஜன் டெஸ்ட் போட்டிக்காக வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக தேர்வு செய்யப்பட்டார். இப்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் நடராஜன் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதிலாக களமிறங்க இருக்குவார் என்று கூறப்படுகிறது.

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட நடராஜன் டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக செயல்படுவாரா என்று பல்வேறு கோணங்களில் முன்னாள் வீரர்கள் பேசி வந்தநிலையில் மூன்றாவது போட்டிக்கான அணி நேற்று வெளியிட்டதில் நடராஜன் இடம்பெறவில்லை. இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் அவர் டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை.

Nattu

இந்நிலையில் நடராஜன் டெஸ்ட் அணியில் இடம்பெறாதது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெறிவித்து வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் வீரர் பார்திவ் பட்டேல் ” இந்திய டெஸ்ட் அணியில் சைனி கடந்த 1.6 ஆண்டுகளாக இடம்பெற்று தற்போது தான் ஆடும் லெவனில் விளையாடுகிறார். சைனி பல முறை முதல் தர 5விக்கெட் மற்றும் 4 விக்கெட் வீழத்தியிருக்கிறார். சைனி முதல்தர போட்டிகளிலும், டெஸ்ட் பயிற்சி ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டு வந்திருக்கிறார்.

- Advertisement -

Nattu

இதனால் தான் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நடராஜன் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடியவர். ஆனால் டெஸ்ட் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. ஏன்னென்றால் டெஸ்ட் போட்டி முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இதனால் நடராஜனுக்கு இன்னும் பயிற்சி தேவைப்படுகிறது” என்றார் பார்திவ் பட்டேல்.