என்னது தோனியால என் வாய்ப்பு போச்சா அப்படி இல்ல. அவரு என்னை விட நல்ல திறமைசாலி – இந்திய வீரர் ஆதங்கம்

Ind

இந்திய அணியில் மகேந்திர சிங் தோனி 2004 ஆம் ஆண்டு அறிமுகமானதிலிருந்து மூன்று விதமான போட்டிகளுக்கும் அவர்தான் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார். தனது திறமையால் தன்னைத்தானே இந்திய அணியில் நிறுவிக் கொண்டார். இதன் காரணமாக சக விக்கெட் கீப்பராக இருந்த பார்த்திவ் படேல், தினேஷ் கார்த்திக், விருத்திமான் சகா போன்றோர் இந்திய அணியில் நிலைத்த இடம் இல்லாமல் தவித்து வந்தனர் .

Dhoni

இத்தனைக்கும் தோனி 2004-ஆம் ஆண்டு அறிமுகமான போது தினேஷ் கார்த்திக் மற்றும் பார்த்திவ் படேல் ஆகியோர் அவருக்கு முன்னரே இந்திய அணிக்கு விளையாடி இருந்தனர். ஆனாலும், தோனிதான் இதில் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். இந்நிலையில் இது குறித்து தற்போது பார்த்திவ் படேல் பேசியுள்ளார். அதில்…

தோனி விளையாடும் காலகட்டத்தில் பிறந்ததற்காக என்மீது எல்லாரும் கரிசனப்படுகிறார்கள். ஆனால் அதுகுறித்து நான் எப்போதும் கவலைப்பட்டதில்லை. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் தோனியால் முடிந்து விட்டதே என்று கூறுவதை நான் ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டேன். நான் தோனிக்கு முன்னரே இந்திய அணிக்குள் நுழைந்துவிட்டேன்.

Dhoni parthiv patel

நானும் சரி தினேஷ் கார்த்திக்கும் சரி எங்களது ஆட்டம் சரியில்லாமல் தான் மற்றவர்களுக்கு வாய்ப்பு போனதே, தவிர தோனியால் எங்களது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விடவில்லை. இதற்காக நீங்கள் அனுதாபப்பட வேண்டாம். அணியிலிருந்து நீக்கப்பட்ட போது நான் சரியாக செய்யவில்லை என்று வருத்தப்பட்டேன்.

- Advertisement -

parthiv

2004 ஆம் ஆண்டு அணியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் மீண்டும் புதிதாக எனது கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கினேன். பின்னர் எந்த அணிக்காக விளையாடினாலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பது மட்டுமே எனது எண்ணமாக இருந்தது. டோனியை பற்றி ஒருபோதும் யோசித்ததில்லை என்று கூறியுள்ளார் பார்த்திவ் படேல்.