இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். கடைசியாக பிரிஸ்பேனில் நடைபெற்ற ஐந்தாவது போட்டியிலும் மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டாலும் அந்த போட்டியில் 13 பந்துகளை சந்தித்த அவர் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 176 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 23 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்த தொடரில் அவரது அதிரடியான ஆட்டம் காரணமாக இந்த தொடருக்கான தொடர் நாயகன் விருதும் அபிஷேக் சர்மாவிற்கு வழங்கப்பட்டிருந்தது.
அபிஷேக் சர்மா இப்படி ஆடி அவுட்டானாலும் திட்டாதீங்க : பார்த்திவ் படேல்
5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் மற்றும் கடைசி போட்டி மழையால் பாதிக்கப்பட்ட வேளையில் எஞ்சியுள்ள மூன்று ஆட்டங்களில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்ததால் இந்த டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டு பின்னர் தொடர் நாயகன் விருது அபிஷேக் சர்மாவிற்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அபிஷேக் சர்மா குறித்து தற்போது முன்னாள் இந்திய வீரரான பார்த்திவ் படேல் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : அபிஷேக் சர்மா சிக்சர் அடிப்பதில் பிரபலம் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் இந்த ஆஸ்திரேலியா தொடரில் அவர் அனைத்து பந்துகளையும் கண்மூடித்தனமாக சுத்தவில்லை.
ஆஸ்திரேலிய மண்ணில் பவுண்டரி லைன் மிகவும் தூரம் என்பதை கணித்து பீல்டர்கள் இல்லாத இடத்தை தேர்ந்தெடுத்து அவர் பந்துகளை தூக்கி அடித்தார். பெரிய மைதானங்களில் பீல்டர்கள் இல்லாத இடங்களில் ஷாட்டுகளை அடிக்க வேண்டும். அதன்படி இந்த தொடரில் அபிஷேக் ஷர்மா புத்திசாலித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதாவது பீல்டர்கள் இல்லாத இடத்தை பார்த்து அடித்தும், அதேபோன்று அந்த இடத்தில் அடிக்க வேண்டும் என்பதற்காக அவர் சில மாற்றங்களையும் தனது பேட்டிங் ஸ்டேன்ஸ்களில் செய்திருந்தார். இதை பார்க்கும் போது அவர் இந்த தொடரில் பிரமாதமான ஆட்டத்தை டெக்னிக்காக வெளிப்படுத்தி உள்ளார் என்று தோன்றுகிறது. அவர் ஆடும் ஸ்டைல் எப்பொழுதுமே அதிரடியான ஒன்றுதான்.
இதையும் படிங்க : இந்த கோப்பையுடன் இந்தியா உலகக் கோப்பையே தொட்டுருச்சு.. பாக் மோசின் நக்விக்கு சூரியகுமார் பதிலடி
அவர் 12-13 ஓவர்கள் நின்றால் நிச்சயம் அந்த போட்டியை பெரும்பாலும் இந்திய அணி வென்று விடும். அதேபோன்று அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் அவர் ஆடுவதால் சீக்கிரமே விக்கெட்டுகளை இழக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் அவர் ஆரம்பத்திலேயே அதிரடியாக அடித்து ஆடி ஆட்டமிழந்தால் யாரும் வருத்தப்படக்கூடாது. அவரை விமர்சனம் செய்யவும் கூடாது என பார்த்திவ் படேல் கூறியது குறிப்பிடத்தக்கது.



