இந்த கோப்பையுடன் இந்தியா உலகக் கோப்பையே தொட்டுருச்சு.. பாக் மோசின் நக்விக்கு சூரியகுமார் பதிலடி

Suryakumar Yadav
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியைச் சந்தித்தது. இருப்பினும் அடுத்ததாக நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதனால் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து கோப்பையை வென்ற இந்தியா ஒருநாள் தொடரில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது.

அத்தொடரின் முடிவில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. அதை வாங்கிய கேப்டன் சூரியகுமார் யாதவ் வெற்றியை இந்திய அணியுடன் சேர்ந்து கொண்டாடி விட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது ஒருவழியாக கோப்பையை தொட்டு விட்டீர்களா? என்று ஒரு செய்தியாளர் அவரிடம் கிண்டலாக கேட்டார்.

- Advertisement -

உலகக் கோப்பையே ஜெய்ச்சுட்டோம்:

அதாவது கடந்த மாதம் நடைபெற்ற 2015 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அத்தொடரின் முடிவில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சராக இருக்கும் ஆசிய கவுன்சில் தலைவர் மோசின் கையால் கோப்பையை வாங்க முடியாது என்று இந்திய அணி தெரிவித்தது. அதனால் அவமானப்பட்ட மோசின் இந்தியா எப்படி வெற்றியைக் கொண்டாடுகிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காக கையோடு கோப்பையை எடுத்துச் சென்றார்.

அதற்காக அசராத இந்திய அணி கோப்பை கையில் இருப்பது போல் கொண்டாடி அவருக்கு பதிலடி கொடுத்தனர். ஆனால் ஒரு மாதம் கழித்தும் இதுவரை எடுத்துச் சென்ற ஆசியக் கோப்பையை மோசின் நக்வி இந்திய அணியிடம் வழங்கவில்லை. அதை வைத்து செய்தியாளர் சூரியகுமாரிடம் கிண்டலான கேள்வி கேட்டார். அதற்கு இந்த கோப்பையும் வென்றோம், மகளிர் உலகக் கோப்பையையும் வென்றோம் என்று சூரியகுமார் யாதவ் பதிலளித்தார்.

- Advertisement -

சூரியகுமார் பதிலடி:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கோப்பையைத் தொட்டது நல்ல உணர்வைக் கொடுக்கிறது. தொடரை வென்றதற்காக எனது கையில் கோப்பை கொடுக்கப்பட்ட போது அதை உணர்ந்தேன். ஆனால் சில தினங்களுக்கு முன் மற்றொரு கோப்பை இந்தியாவுக்கு வந்தது. அது எங்கள் மகளிரணி இந்தியாவில் வென்ற உலகக் கோப்பையாகும். அந்தக் கோப்பையும் வீட்டுக்கு வந்தது நல்ல உணர்வைக் கொடுக்கிறது”

இதையும் படிங்க: 143க்கு அவுட்.. நொறுங்கிப்போன பாபர் அசாம்.. தெ.ஆ அணிக்கு எதிராக பாகிஸ்தான் வரலாற்று சாதனை வெற்றி

“அதே போல இந்தக் கோப்பையையும் தொட்டது நல்ல உணர்வைக் கொடுக்கிறது” என்று கூறினார். அதாவது ஆசியக் கோப்பையை வேண்டுமானால் தற்காலிகமாக நீங்கள் எடுத்துச் செல்லலாம். ஆனால் அதை விட உயர்வான மகளிர் உலகக்கோப்பையை இந்தியா வென்றுள்ளதாக மோசின் நக்விக்கு கேப்டன் சூரியகுமார் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement