அடிக்கவே முயற்சிக்கல.. சிங்கிள் கூடவா மாற்ற தெரியாது.. கில்லை விளாசும் முன்னாள் இந்திய வீரர்

Shubman Gill 2
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முடிந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் வெளிநாடுகளில் தடுமாறினாலும் சொந்த மண்ணில் எப்போதுமே மிரட்டக்கூடிய இந்தியா அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை விட அபாரமாக செயல்பட்டு 190 ரன்கள் முன்னிலை பெற்றதால் கண்டிப்பாக வெல்லும் என்று ரசிகர்கள் நம்பினர்.

ஆனால் 2வது இன்னிங்ஸில் ஓலி போப் 196 ரன்கள் அடித்ததை பயன்படுத்திய இங்கிலாந்து 231 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய இந்தியா மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 202 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. அந்த வகையில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவோம் என்று வாயில் எச்சரித்ததை இங்கிலாந்து தற்போது செயலில் செய்து காட்டத் துவங்கியுள்ளது.

- Advertisement -

ஸ்ட்ரைக்கை மாற்றுங்க:
முன்னதாக இந்த தோல்விக்கு இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக செயல்பட்டது முக்கிய காரணமானது. குறிப்பாக சமீப காலங்களாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வரும் சுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் 23 ரன்களில் அவுட்டான நிலையில் முக்கியமான 2வது இன்னிங்ஸில் டக் அவுட்டாகி இந்தியாவின் காலை வாரினார்.

அதனால் வாய்ப்பின் அருமையை உணராத அவரை அணியிலிருந்து நீக்குமாறு நிறைய ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பவுண்டரி ஷாட்டுகளை அடிப்பதற்கு சுப்மன் கில் முயற்சிக்கவில்லை என முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் விமர்சித்துள்ளார். அதை விட 2வது இன்னிங்ஸில் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்றுவதற்கு கூட கில் தடுமாறியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி கலர்ஸ் சினிபிளக்ஸ் சேனலில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“முதல் இன்னிங்ஸில் சுப்மன் கில் பேட்டிங் செய்த அணுகுமுறையை நாம் பார்த்தோம். அவர் நல்ல ஷாட்டுகளை அடிப்பதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அப்படி நீங்கள் ரன்கள் அடிக்க முயற்சிக்கவில்லை எனில் சர்வதேச கிரிக்கெட்டில் எதிரணி பவுலர்கள் எளிதாக அடிப்பதற்கு தேவையான சுமாரான பந்துகளை உங்களுக்கு வழங்க மாட்டார்கள். நீங்கள் அங்கே உங்களுடைய திறமையை காண்பிக்க வேண்டும்”

இதையும் படிங்க: கதை முடிஞ்ச்சுன்னு அவரை பற்றி எழுதாதீங்க.. சொதப்பல் இந்திய வீரருக்கு கெவின் பீட்டர்சன் ஆதரவு

“ஒருவேளை நீங்கள் பவுண்டரிகளை அடிக்க முயற்சிக்காவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்ற வேண்டும். டெக்னிக்கல் அளவிலும் அவர் கடினமான கைகளை நம்பிக் கொண்டிருக்கிறார். எனவே அதில் எப்படி முன்னேறலாம் என்பதை அவர் பார்க்க வேண்டும்” என்று கூறினார். அந்த வகையில் தேவையான வாய்ப்புகளை பெற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறுவதால் அடுத்த போட்டியில் கில் நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement