கதை முடிஞ்ச்சுன்னு அவரை பற்றி எழுதாதீங்க.. சொதப்பல் இந்திய வீரருக்கு கெவின் பீட்டர்சன் ஆதரவு

Kevin Pieterson
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. குறிப்பாக இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிப்போம் என்று ஆரம்பத்திலேயே எச்சரித்த இங்கிலாந்து முதல் போட்டியில் அதை செய்து காட்டியுள்ளது. மறுபுறம் அந்த போட்டியில் முதல் 3 நாட்கள் முன்னிலையில் இருந்த இந்தியா 4வது நாளில் சொதப்பி தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

அதிலும் குறிப்பாக இங்கிலாந்தை விட முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா நிச்சயம் வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் 4வது நாளில் இங்கிலாந்து நிர்ணயித்த 231 ரன்களை துரத்திய இந்தியா 202 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அவமானத் தோல்வியை பதிவு செய்து ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது.

- Advertisement -

பீட்டர்சன் ஆதரவு:
இந்த தோல்விக்கு பேட்டிங் துறையில் ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் போன்ற வீரர்கள் சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக சமீப காலங்களாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வரும் சுப்மன் கில் இப்போட்டியில் 23, 0 ரன்களில் அவுட்டாகி இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். சொல்லப்போனால் தன்னுடைய கேரியரில் இதுவரை 21 போட்டியில் விளையாடியுள்ள அவர் வெறும் 1063 ரன்களை 29.53 என்ற சுமாரான சராசரியில் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் திண்டாடி வருகிறார்.

அதனால் அவரை அணியிலிருந்து நீக்கி வாய்ப்பின் அருமையை உணர்த்துமாறு ரசிகர்கள் விளாசி வருகின்றனர். இந்நிலையில் சுப்மன் கில் டெஸ்ட் போட்டிகளில் முடிந்து விட்டார் என்று குறைத்து மதிப்பிட்டு எழுத வேண்டாமென கெவின் பீட்டர்சன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “அவருடைய சராசரி ஆரோக்கியமாக இல்லை. அவருடைய புள்ளிவிவரங்கள் கண்களுக்கு மோசமாக தெரிவதால் நீங்கள் அதை பார்க்க விரும்ப மாட்டீர்கள்”

- Advertisement -

“இருப்பினும் அவர் 3வது இடத்தில் பேட்டிங் செய்வதற்கு காரணம் இருக்கிறது. ஏனெனில் அந்த இடத்தில் அவர் அசத்தக்கூடிய வீரர். எனவே அவர் 2 முறை மோசமாக அவுட்டானதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். மாறாக 2, 3வது டெஸ்ட் போட்டிகளில் அவருடைய ஆட்டம் குறித்து கவலைப்படுவேன். வெறும் ஒரு போட்டியை வைத்து நீங்கள் அவரைத் தாண்டி செல்லக்கூடாது”

இதையும் படிங்க: வெஸ்ட் இண்டீஸ் வீரரின் அர்பணிப்பால் ஹார்டிக் பாண்டியவை வெளுத்து வாங்கும் இந்திய ரசிகர்கள் – விவரம் இதோ

“விசாகப்பட்டினத்தில் நடைபெறும் அடுத்த போட்டியில் அவர் கண்டிப்பாக விளையாடுவார். அவரால் முடியாது என்று சொல்லாதீர்கள். அவர் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். 2012இல் இந்தியாவில் விளையாடிய போது எங்களுடைய மொத்த அணியும் முதல் போட்டியில் சுமாராக செயல்பட்டது. ஆனால் அதன் பின் நாங்கள் கம்பேக் கொடுத்து தொடரை வேண்டும். எனவே அவரைப் போன்ற வீரரை வெறும் ஒரு போட்டியை வைத்து முடிந்ததாக எழுதாதீர்கள்” என்று கூறினார்.

Advertisement