மெக்ராத்க்கு இணையான பந்துவீச்சாளர் இந்திய அணியில் இவர்தான் – பார்த்திவ் பட்டேல் ஓபன் டாக்

Parthiv
- Advertisement -

இந்திய அணியில் பல ஆண்டுகளாக பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் மட்டுமே இருந்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி வேகப்பந்து வீச்சில் அசத்தி வருகிறது. குறிப்பாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா, தீபக் சாஹர் மற்றும் நவ்தீப் சைனி என அனைவரும் வேகப்பந்து வீச்சில் அசத்தி வருகின்றனர்.

- Advertisement -

மேலும் கடந்த காலத்தில் எல்லாம் இந்தியா பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தியது போல தற்போது வெளிநாட்டு தொடர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்த்திவ் பட்டேல் தான் விளையாடிய காலத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சு ஜாம்பவானான மெக்ராத்துக்கு இணையாக வீசிய இந்திய பவுலர் குறித்து தனது கருத்தினை அறிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : பார்த்திவ் பட்டேல் 2002 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக விளையாடி வருகிறார் அவர் டெஸ்ட் அணியின் அறிமுகமானபோது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அந்த தொடரில் ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் ஜாகிர் கான் ஆகிய இரண்டு முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இருந்தனர்.

Srinath

அவர்கள் இருவருக்கும் விக்கெட் கீப்பிங் செய்யும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவர்களுக்கு விக்கெட் கீப்பிங் செய்தது மிகக் கடினமாக இருந்ததாக அவர் கூறி உள்ளார். மேலும் அவர்கள் பந்துவீச்சுக்கு கீப்பிங் செய்ய தான் ஸ்டம்புக்கு சற்று அருகே நின்று கொண்டதாக கூறி உள்ளார். அப்போதும் அவரது பந்து வீச்சு மிக சிறப்பாக இருந்தது என்றும் ஆவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் அப்போது பந்துவீச்சு என்றாலே மெக்ராத் பற்றிய அனைவரும் பேசிக் கொண்டிருந்த வேளையில் அப்போது ஸ்ரீநாத் சிறப்பாக பந்து வீசி வந்தார். அவர் சரியான நேரத்தில் நல்ல வேகம் மற்றும் ஸ்விங் பந்து வீசுவார் என்னை பொருத்தவரை மெக்ராத்க்கு இணையாக வேகப்பந்து வீசும் திறமை கொண்டவர் இந்திய அணியின் ஸ்ரீநாத் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

Parthiv 2

மேலும் ஸ்ரீநாத்தின் கடைசி போட்டியிலும் பார்த்திவ் பட்டேல் விக்கெட் கீப்பிங் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் தனது இளம் வயதிலேயே விளையாடும் வாய்ப்பை பெற்ற பார்த்திவ் பட்டேல் 2002 ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 25 டெஸ்ட் போட்டிகள், 38 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement