கௌகாத்தியில் நடைபெறும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற 549 என்ற பெரிய இலக்கை தென்னாபிரிக்கா நிர்ணயித்துள்ளது. அதைத் துரத்தும் இந்தியா திண்டாடுவதால் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. ஒருவேளை போட்டி டிராவில் முடிந்தாலும் 25 வருடங்கள் கழித்து 1 – 0 (2) என்ற கணக்கில் இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்கா தொடரை வென்று சாதனை படைப்பது உறுதியாகியுள்ளது.
முன்னதாக 2வது போட்டியின் 4வது நாளில் 500 ரன்கள் முன்னிலையாகப் பெற்ற பின்பும் தென்னாப்பிரிக்கா டிக்ளர் செய்ய தாமதப்படுத்தியது. அது பற்றி கேட்டதற்கு நாங்கள் இந்தியாவை க்ரோவெல் செய்ய விரும்பியதாலேயே தாமதமாக டிக்ளர் செய்ததாக தெனாப்பிரிக்கா பயிற்சியாளர் சுக்ரி கோன்ராட் சர்ச்சையான கருத்தை தெரிவித்தார். அதாவது ஆங்கிலத்தில் க்ரோவெல் என்ற சொல்லுக்கு நிறைய இழிவான பொருள்கள் இருக்கிறது.
ஒழுங்கா மன்னிப்பு கேளுங்க:
குறிப்பாக 1976ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்து க்ரோவெல் அதாவது அடிமையாக்க விரும்புவதாக அப்போதைய கேப்டன் டோனி கிரைக் இனவெறியை தூண்டும் வகையில் பேசினார். அதனால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் ரத்தம் கொதிப்பதாக சொன்ன கேப்டன் க்ளைவ் லாய்ட் அவருக்கு பதிலடி கொடுத்தார். அதே வேகத்தில் நெருப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 3 – 0 (3) என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து கிரைக் முகத்தில் கரியைப் பூசியது.
தேவையற்ற வார்த்தை:
தற்போது அதே போன்ற அர்த்தத்தில் கௌகாத்தி போட்டியில் இந்தியாவை வெற்றியை நெருங்க விடாமல் க்ரோவெல் செய்து விட்டு, பின்னர் முடிந்தால் கடைசி நாளில் தாக்குப் பிடித்துக்கொள்ளுமாறு சவால் விட விரும்பியதாலேயே தாமதமாக டிக்ளர் செய்ததாக சுக்ரி கோன்ராட் தெரிவித்தார். அதே சமயம் இனவெறி போன்ற எந்த சர்ச்சையான பொருளை வைத்து தாம் க்ரோவெல் வார்த்தையை பயன்படுத்தவில்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.
இந்நிலையில் அப்படி பேசியதற்காக சுக்ரி இந்திய அணியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முன்னாள் வீரர் பார்த்திவ் பட்டேல் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை தென்னாப்பிரிக்க பயிற்சியாளருக்கு அந்த வார்த்தையின் எடை தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை. ஏனெனில் அந்த வார்த்தையை சொல்லும் போது அவருடைய முகத்தில் சிரிப்பு வந்தது. எனவே அவருடைய கருத்தில் அவமரியாதை இருந்தது என்பதில் சந்தேகம் இல்லை”
இதையும் படிங்க: ஜெய்ச்ச ஆணவத்துல இந்தியாவை இழிவாக பேசி ஆடாதீங்க.. தெ.ஆ கோச்சை விளாசிய அனில் கும்ப்ளே
“இங்கே வந்த நீங்கள் நன்றாக விளையாடினீர்கள். அதற்காக பாராட்டுக்கள் என்று அவரிடம் இந்திய அணி சொல்வார்கள். ஆனால் நீங்கள் இது போன்ற வார்த்தையை பயன்படுத்தத் தேவையில்லை. எனவே இன்றைய நாளில் அவரிடமிருந்து மன்னிப்பு வருவதை நாம் பார்ப்போம் என்று நினைக்கிறேன். கிரிக்கெட்டில் அது போன்ற வார்த்தை தேவையில்லை. நீங்கள் வெற்றிக்காக கடினமாக விளையாடி போராடலாம். ஆனால் இந்த வார்த்தைகள் தேவையற்றது” என்று கூறினார்



